11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 28 ஜூலை, 2022

குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்.

 ஒரு மனிதன் தன்வாழ்வில் கைவிடக் கூடாதது அவனது குல தெய்வத்தையாகும்.  குலதெய்வம் என்பது தமிழை அருளிய இறைவனோ தமிழ்போற்றிய தெய்வங்கலோ அல்ல . அது எம் மூதாதையர்களின் ஆன்மாவாகும்.  குலதெய்வ வழிபாடுதமிழா்களினால் தமிழா்களுக்காக   உருவான வழிபாடு ஆகும். 

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.

 நீங்கள் தமிழை அருளிய இறைவனை வணங்கலாம் அல்லது  நீங்கள் நன்றி கெட்டவா்களாக இருந்தால் வணங்காமல் விடலாம்.  நீங்கள் தமிழை அருளிய இறைவனை வணங்காமல் விட்டாலும் தமிழை அருளிய இறைவன் உங்களுக்கு எந்த தீமையையோ துன்பத்தையோ தரப்போவதில்லை. ஆனால் குலதெய்வம் என்பது அவ்வாறானதல்ல, கைவிட்ட சந்ததிகளை அது வாழ விட்டதில்லை.

குலதெய்வத்தை நாம் வணங்காமல் விட்டாலும், குலதெய்வ ஆலயங்களை பராமரிக்காமல் விட்டாலும், குல தெய்வத்தை நிந்தனை செய்து பேசினாலும் அப்படி செய்பவரின் வாழ்வும் அவரது குல சந்ததிகளும் கெட்டழிந்து நாசமாகப் போய்விடும்.என்பதனை நீங்கள் உங்களின் கண்களினால் கண்டு இருப்பீா்கள்.

 குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்கள் எவ்வளுதான் செல்வ செழுப்படன் வாழ்ந்தாலும் அவா்கள்  நிம்மதி அற்ற இருள்சூழ்ந்த வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டு இருப்பதை காணமுடியும்.     

குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்களின் மூத்த பிள்ளையும், கடைசிப் பிள்ளையும் மிகவும் துன்பத்தையும், பிரச்சினைகளையும் கூடிய நிம்மதி அற்ற இருள்சூழ்ந்த வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டு இருப்பதை காணமுடியும்.     

 பொதுவாக எம் சமூக வழக்கத்தில் தந்தைவழி குலதெய்வம் மூத்த ஆண் பிள்ளைக்கும், தாயின்வழி குலதெய்வம் கடைசி ஆண்பிள்ளைக்கும் உரித்தானது. இதனாலேயே குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய குடும்பங்களில் மூத்த மற்றும் கடைசிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்பிள்ளை இல்லாமல் பெண்பிள்ளையாக இருந்தாலும் பாதிப்புகளை கொடுக்கும்.

குலதெய்வத்தை வழிபடுவது நாகரிகக் குறைவு என்று நம்பவைக்கப்பட்டவர்கள், அன்னிய நாட்டவர்களின் பண்பாட்டு மோகத்தாலும், கலாச்சார சிதைப்பாலும் இந்த மண்ணின் வாழ்வியலில் இருந்து விலகியவர்கள், கடவுளை மட்டும் வணங்கினால் போதும் வேறு ஒன்றையும் வணங்கத் தேவையில்லை என்று தவறான போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வேறு நாடுகளில் பிறந்து இறந்த மனிதர்களை ஆண்டவர் என்றும் அவர் மட்டுமே உண்மையான தேவன் என்றும் மூளைச்சலவை செய்து நம்பவைக்கப்பட்டவர்கள் ஆகியோர் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள் ஆவார்கள். தவறான வழிகாட்டல்கள், தவறான போதனைகள், தீய நபர்களின் மூளைச்சலவை என்பவற்றால் மக்கள் குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய சிறிது காலத்திற்கு சிலருக்கு எதுவும் தோன்றாதிருக்கலாம். வழமையைவிட வசதிவாய்ப்புக்கள் கூட கிடைக்கலாம். குலதெய்வம் என்பது எமது முன்னோர்களின் ஆன்மா என்பதால் தம்மை விட்டு, தம் வழிபாட்டை விட்டு விலகியவர்கள் ஏதோ துன்பத்தால், பிரச்சினையால் தம்மைவிட்டு நீங்கினார்கள் என்று கருதி அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லது நடப்பதற்கும் துணைநிற்கும். தம்மை விட்டு பிரச்சினைகளால் விலகியவர்கள் அந்த பிரச்சினை தீர்ந்தவுடன் தம்மிடம் வந்துவிடுவார்கள் என்று கருதியே அந்த குலதெய்வம் அவ்வாறு செய்யும். 

ஆனால் சிலர் அந்த குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு புதிய ஏதோ ஒன்றை நம்பியதால்தான், வழிபட்டதால்தான் தமக்கு நல்லது நடப்பதாக கருதியோ, அல்லது அவ்வாறு வேறுயாரவது ஒருவரால் நம்பவைக்கப்பட்டோ முழுவதுமாக குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.

அதனால் அதுவரை எமது நன்மைக்காக எமது குலங்களின் நன்மைக்காக செயற்பட்ட குலதெய்வங்கள் கோபம்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன்னை கைவிட்டவர், அவரது சந்ததிகள் என்று தொடர்ந்து பிரச்சினைகளையும் துன்பத்தையும் கொடுக்க ஆரம்பிக்கிறது. தீராத நோய்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், தவறான நடத்தை உடைய மனைவி பிள்ளைகள், பொருந்தாத திருமண வாழ்வு என்று அவரது சந்ததிகளே கொஞ்சம் கொஞ்சமாக நாசமாகிச் சிதைந்து போகின்றது.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவா்களிடம்  சகலவிதமான  செல்வ செழிப்புகள் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழுவதற்கு காரணம் அவா்கள்  குலதெய்வ வழிபாட்டை கைவிட்டதனால் ஏற்பட்ட நாசமே காரணமாகும்.

பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்ட சந்ததிகளின் மூத்த பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் நேரடியாக பிரச்சினைகள் துன்பங்களை அனுபவித்தாலும் இடையில் உள்ள பிள்ளைகள் குறைந்த பிரச்சினைகளையே நேரடியாக சந்திக்கின்றன. 

 குலதெய்வத்தை கைவிட்டவா்களின் பிள்ளைகள் பிள்ளைகள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவாகளாகவோ  அல்லது தீராத நோய்கள், குறைபாடுகள், தீய பழக்கங்கள்,   திருமணமாகி விவாக இரத்து பெற்றுக் கொண்டும் சீரழிந்து அலைந்து திாிகின்றாா்கள். 

மேற்கூறியவற்றை நீங்களே உங்கள் சமூகத்தில், உங்கள் அயலவர்களில் மதமாற்றம், நாகரிகம் என்ற பெயரால் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களின் குடும்பங்களில் கண்கூடாகக் காணலாம். 

உங்கள் உறவினர்கள் யாரேனும் இன்னும் குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் எங்கோ பின்பற்றுவார்கள். அவர்களிடம் சென்றறிந்து உங்கள் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கலாம். 

அவ்வாறு உறவினர்கள் யாரும் தெரிந்தவரை இல்லை, அவ்வாறு யாரும் வழிபடவுமில்லை என்றால்,  உண்மையில் உங்களுக்கு குலதெய்வத்தை கண்டறியவேண்டும், வழிபட்டு உங்கள் குலசாபத்தை நீக்கவேண்டும் என்று விருப்பிருந்தால் அவா்களை நினைவு கூறவேண்டும் என்று நினைத்து நினைவு கூறவேண்டும்.  கனவு அல்லது நனவில் தோன்றி அந்த குலதெய்வமே தன்னை அடையாளம் காட்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கி குலசாபத்தை நீக்கலாம்.

                                             

ஒருவா் இறந்தால் இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறிமுறைகளை கடைப்பிடத்து இறுதிகடமைகள் செய்தும், தொடா்ச்சியாக குலதெய்வழிபாடுகள் செய்தவா்கள் மட்டுமே குலதெய்வ வழிபாடுகள் செய்ய முடியும். ஏனைய ஆன்மாக்கள் பேயாக அலைவதால் ஆபத்துக்கள் நிறைந்தனவாகவே காணப்படும். குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.