11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 19 மே, 2023

அம்பிகா சற்குணம்.

 அம்பிகா சற்குணம் இலங்கை மனித உரிமைகள் ஆணைய தலைமை பொறுப்பில் இருக்கும் போது தமிழருக்கு செய்த நன்மைகள் (பாதகங்கள்) .

1. மாமனிதர் ரவிராஜ் படுகொலை வழக்கு :24 டிசம்பர் 2016 அன்று நீதிமன்ற ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவர்களால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்


2. திருகோணமலை குமரபுரம் பகுதியில் 24 பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில் 2016 ஜூலை 27 அன்று பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர் .


3. திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்கு: 2019 ஜூலை 3 அன்று குற்றம் சாட்டப்பட்ட 13 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்


4. அக்சன் பாம் என்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை வழக்கு : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகல இராணுவ வீரர்களும் போதிய ஆதாரங்கள முன்வைக்கத் தவறியதாக சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்


5. எழுதுமட்டுவாள் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் என சொல்லப்படுகிற இடத்தில இலங்கை ராணுவம் ஒன்றை 71 வயதான அம்மாவின் 54 ஏக்கர் காணியை அபகரித்து 52 பிரிவின் தலைமையகம் அமைத்து இருக்கிறார்கள் .2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் உள்ள . மேல்முறையீட்டு நீதிமன்றம் (CoA), இந்த காணி தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் காணிகளை ராணுவத்திடம் இருந்து பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. சிங்கள நீதிபதி மஹிந்த சமயவர்தன “தேங்காய்களைப் பிடுங்குவது/ தென்னைகளை நடுவது தேசிய பாதுகாப்பை விட முக்கியமானது அல்ல” என்று கூறி தனது தீர்ப்பில் அந்த அம்மாவை ஏளனம் செய்து இருந்தார்


6. செம்மணி புதைகுழி தொடர்ப்பன ஆட்கொணர்வு மனு தொடர்ப்பன வழக்குகளை தாக்கல் செய்த தமிழ் சட்டத்தரணிகள் இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் நீதிமன்ற வளாகத்திற்குள்  வைத்தே அச்சுறுத்தப்பட்டார்கள் . குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமே  வாதாடியது .இறுதியில் அந்த வழக்கை தொடர்ந்த கலாநிதி குருபரன் சட்டத்தொழில் செய்யமுடியாது என நல்லாட்சி அரசாங்கதால்   தடை செய்யப்பட்டார்


7. யாழ்ப்பாண பல்கலை துணைவேந்தர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தமிழமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என  குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . இதற்க்கு எதிராக  துணைவேந்தர் தாக்கல் செய்த வழக்கு தூக்கி வீசப்பட்டது


8. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்ப்பன வழக்கில் இறந்த புத்த பிக்குவின் உடலம் கோவில் வளாகத்திற்குள் எரிக்கப்பட கூடாது என  முல்லைத்தீவு தமிழ் நீதிவான் வழங்கிய உத்தரவு மீறப்பட்டு கோவில் வளாகத்திற்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது


9. நல்லாட்சி அரசாங்க காலத்தில் அணிந்திருந்த ஆடையில் தர்மசக்கரம் இருந்தாக பொய் சொல்லி சிறுபான்மை இன பெண் ஒருவர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

அம்பிகா சற்குணத்தின் நடவடிக்கை காரணமாக தமிழா்களின் நீதி மறுக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.