11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

சமஸ்கிருத மொழி.

சைவ கோயிலில் வழிபடுகிற ஒருவனும் சைவம்,தமிழ், சமஸ்கிருதம், பிராமண ( அந்தனர்) எதிா்ப்பு,சமஸ்கிருத எதிா்ப்பு,பூணூல் எதிா்ப்புகளை உருவாக்க மாட்டாா்கள்.  தென்னாடுடைய சிவனே போற்றி என்பதனாது தமிழை அருளிய சிவன் மொழிகளையும் ,பண்பாடுகளையும் கடந்து எந்நாட்டவர்க்கும் இறைவா  நிற்கின்றாா் என்பதை சுட்டி அன்பே சிவமாக அருளாட்சி செய்கின்றாா் எம்பெருமான்.

பிராமண  எதிா்ப்பு.

பிராமணர்கள் மீது பிராமணர் அல்லாத மக்களிடத்தில் வெறுப்பையும் பொறாமையையும் வன்மத்தையும் போதித்து வளர்த்து , பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி பிராமணர்களை பிராமணர் அல்லாதவர்களுக்கு எதிரிகளாக சித்தரித்து பிராமணர்களை ஒழித்து விட்டால் சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிக்கப்பட்டுவிடும்,

சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிந்து போனால் , தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக சமய  நம்பிக்கைகளில் குறைந்துப் போகும். இவ்வாறாக  தமிழ் மக்களின் சமய நம்பிக்கையை சீர்குலைத்து அவர்களை மற்ற மதங்களுக்கு மதமாற்றம் ,செய்வதற்காக வேண்டி திட்டமிட்டு நூறாண்டு காலமாக பிராமணர்கள் மீது பரப்பப்படும் பார்ப்பன துவேஷம் 

சமஸ்கிருத எதிா்ப்பு ஏன்? 

அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியில் மொழி ரீதியாக தமிழர்களையும் சமயத்தையும் பிாித்து அழிப்பது. அதே போன்று மொழி ரீதியாக தமிழர்களின் சமயத்தை பிற இனத்தவர்களிடம் இருந்து பிாித்து அழிப்பது.இவர்களின் நோக்கம் அழிப்பதே ஆகும். 

பூணூல் எதிா்ப்பு ஏன்?

பூணூல் அணிவது சைவ தமிழா்கள் மத்தியில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் இலக்கியங்களில் பூணூல் பற்றிய குறிப்புகள் உள்ளன.தமிழர்களின் பல் துறைசாா் தொழிகள் செய்பவர்களும் பூல்நூல் அணிகின்றனர். தமிழன் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்களும் பூணூலை பலரும் அணிகிறார்கள். ஆனால் பூணூல் என்பது பிராமணர்கள் என சொல்லப்படுபவர் மாத்திரம் அணியும் ஒன்றாக பலரும் நினைக்கிறார்கள். பூணூல் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் ஒன்று. ஆகவே பூணூல் அழிப்பு என்பது தமிழ் தேசிய அழிப்பு ஆகும்.

சமஸ்கிருதம்.

தமிழும், சமஸ்கிருதமும்  ஒரே நேரத்தில்   சிவபெருமானால்  தோற்றுவிக்கப்பட்ட  மொழிகளே.வடக்கே பேசியதால்   வடமொழி எனப் பெயர் வந்தது  என்றால், தெற்கே பேசியது  தென்மொழி என ஆகியிருக்க வேண்டுமே?  ஏன் தமிழுக்குத்  தென் மொழி, தென்னகத்தோர் பேசுவது என    யாருமே கூறவில்லை.  ஆனால்  'வட என்ற ஆலமரத்தின் கீழிருந்து  மறையோதும் எங்கள் பரமன்'  எனக்  கூறியது  உமையம்மையிடம்  ஞானப்பாலுண்ட  திருஞானசம்பந்தர்   பெருமான்  கூறியிருக்கிறார்.

முருகனின் பிறப்பே திருஞானசம்பந்தர் என்று அருணகிாிநாதா் தன் திருப்புகளின் தெளிவாக குறிப்பிடுகின்றாா். திருஞானசம்பந்தர் சமஸ்கிருத மொழி பற்றி மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றாா்.

"கோளறு  பதிகத்தில்  இதை   அழகாகப்  பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். "மதிநுதன் மங்கையோடு வடவாலிருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் கொதியுறுகாலன் அங்கி நமனொடு தூதர் கொடுநோய்களான பலவும்  அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" என்றாா் ஞானசம்பந்தர்.

* "வடவால் இருந்து மறையோதும் பரமன்"வட= ஆலமரம்  வட ஆல் வட என்றாலே ஆலமரம் தான். எனவே  அறிவாளி   மகான்களே!   சிவபெருமான் பேசியதே   தமிழ்மொழி மட்டுமே  சமஸ்கிருதம்  வடக்கேயுள்ள மொழி என்றெல்லாம் பிதற்றி திரிய வேண்டாம்.

ஷ,  ஸ, ஜ,  ஹ. க்ஷ   என்ற எழுத்துக்கள் எல்லாம்    சமஸ்கிருத எழுத்துக்களின் தமிழ் வரிவடிவங்களே.  சமஸ்கிருதத்தில் இவ்வறின் வரிவடிவம்  வேறு.   அந்தணர்களும் தமிழர்களே.  தமிழை வளர்ந்தவர்களில்  அந்தணர்களின்  பங்கு  மிகப் பெரிது.  தமிழை  முறையாக, அக்கறையாகக் கற்றவர்களுக்கு இந்த உண்மை   தெரியும்.

 உ.வே. சாமிநாத ஐயர்  அவர்கள்  இல்லையென்றால்   தமிழில்  இன்றிருக்கும் பெரும்பாலான  அரிய பொக்கிஷங்கள்   இல்லாமலேயே போயிருக்கும்.   பாரதியாரை விடச்  சிறந்தத்  தமிழரும் உண்டோ?   தமிழ்ப்  பற்றை காட்டுகிறேன்  பேர்வழி என  "விஷயம்"    என்ற  சொல்லை  "விடயம்" என எழுதுவது  ஒரு  மொழியைக்  கொடுமைப்படுத்துவதாகும்.  சைவர்களாக இருப்போா் இருப்போர்    அவசியம்  சமஸ்கிருதத்தைப் படிக்கவேண்டும்.பாதிாிகள் தமிழுக்கு தொண்டு செய்தவா்கள் என்று புலம்புபவா்கள்  உ.வே. சாமிநாத ஐயர்  அவர்களின் புத்தகத்தை படித்தல் வேண்டும்.

அரிய பல விஞ்ஞானகருத்துக்கள் அடங்கிய  பொக்கிஷங்கள் மற்றும்  நான் மறைகள்  அதிலேயே உள்ளன.     நாற்பது விதமான விமானங்களை வடிவமைப்பதைப் பற்றி  "வைமானிக   சாஸ்திரா"  என்ற நூலைப்  பரத்வாஜ முனிவர்    சமஸ்கிருதத்தில் இயற்றியுள்ளார். நமது சமஸ்கிருத  வெறுப்பால்  நம் முன்னோர்களின்அரிய பொக்கிஷங்களை நாம் இழந்துவருகிறோம்.

துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரங்கள் பிறக்கின்றன என்று கொலை வெறி பேசி கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்கள் சுமந்து திாிகின்றவா்களே சமஸ்கிருத மொழி எதிா்ப்பு போா்களை நடாத்துகின்றாா்கள்.

தமிழ் பூமியின் தொன்று தொட்ட பழக்க வழக்கங்களான தமிழ் பண்பாட்டினையும், தூய தமிழின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளங்களையும் நிராகாித்தும், தமிழ் பூமி என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளங்களையும் நிராகாித்தும் ஐரோப்பிய பண்பாட்டினையும் யூத கீபுறு மொழியின் ஏபிரகாமிய மாியாளின் கிறிஸ்வ பண்பாட்டினையும் நிறுவிக் கொண்டு இருக்கின்ற பறங்கியன் இனத்தின் கிறிஸ்தவா்களே  சமஸ்கிருத மொழி எதிா்ப்பு போா்களை நடாத்துகின்றாா்கள்.

தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் திராவிட மன்னன் என்பது, தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்பது, தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பது, தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்பது, தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியது தமிழ் அழிப்புடன் கூடிய தமிழின அழிப்புகளை நடாத்துகின்ற திராவிட இனமே சமஸ்கிருத மொழி எதிா்ப்பு போா்களை நடாத்துகின்றாா்கள்.

காஞ்சிபுரம் தென் இந்தியாவின் பழைய நகரங்களில் ஒன்று ஆகும். இந்நகரத்தில் தமிழ், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகள் தமிழா்களாள் கற்பிக்கப்பட்டன. 

சிவபெருமான்  ஒரே நேரத்தில்  உருவாக்கியதே   தமிழும்,   சமஸ்கிருதமும்.   இல்விரண்டு  மொழிகளுக்கிடையேயும்      சிவபெருமானே  வேறுபாடு  காட்டாதப்போது,   சமஸ்கிருதத்தைப் பழிக்க நாம் யார்?

சிவபெருமான்   உருவாக்கிய   சமஸ்கிருதத்தைப் பழிப்பது   அவரையே பழிப்பதற்கு ஒப்பாகும். வடவாலிருந்து மறையோதும்  எங்கள் பரமன்  புகழ் ஓங்குக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.