எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்பே சிவமாக உயிர் நேயம் பேசி தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு சரி நிலை சமன் பேசியது அகர முதல்வனாகிய சிவன் அருளிய சைவத் தமிழ் ஆகும்.
சைவ திருக்குறளை அருளிய திருவள்ளுவா் எல்லா உயிர்க்கும் பிறப்பில் ஒருத் தன்மையானதே, எல்லா மக்களும் பிறப்பால் சரி நிலை சமன் உடையவா்கள். ஆனால் அவரவர் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்று தமிழின் வாழ்வியல் நெறியான சரி நிலை சமன் நெறியை குறிப்பிடுகின்றாா்.
தமிழின் ஆண் - பெண் சரி நிலை சமன் கோட்பாட்டை விளக்குவதற்காக ஆதியும் அந்தமும் ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும் என்று ஒன்றும் இல்லாத அகர முதல்வனாகிய இறைவன் உமையான சத்திக்கு தன் இடபாகத்தை அருளி அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்து தமிழில் ஆண்கள்। பெண்கள் இருபாலரும் சரி நிலை சமன் உடையவா்க் என்று உலகிற்கு எடுத்துக்காட்டினாா்.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை நன்றாக பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டு எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம் கொண்ட வாழ்வியலை கொண்டது தமிழ்.
உலகத்தில் உள்ள அனைத்து கோட்பாடுகளுடன் ஒப்பிடுகின்ற பொழுது சைவ நெறியான தமிழ் சமன் செய்த மேலான நெறி என்பது புலன்னாகின்றது. வாழத்தொியாமல் வாழ்ந்துவிட்டு கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களின் துப்பாக்கி குழாய் முனை கலாச்சார பண்பாட்டின் மூலம் சமத்துவம் பிறக்கின்றது என்று புலம்பித்திாிகின்றாா்கள்.
சமஸ்கிருத சொற்களை எதிா்க்கின்ற கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் வாதிகள் சமத்துவம் சமஸ்கிருத மொழித் தொடா்பு என்று தொியாமல் சமத்துவம் சமத்துவம் என்று புலம்புகின்றாா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.