11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 28 மே, 2022

திருச்சி சிறப்பு முகாமில் போராட்டம்.

 2022 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, தெற்கு சூடான், ருவாண்டா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை செய்யக்கோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்தநிலையில் இலங்கையை சேர்ந்த கெட்டியான்பாண்டியன் (வயது 40) என்ற கைதியை பார்க்க அவரது மனைவி ரூபா நேற்று மதியம் சிறப்பு முகாமிற்கு வந்திருந்தார். அவரிடம், கெட்டியான்பாண்டியனின் மனைவி என்பதற்கான அடையாள சான்றாக ஆதார் கார்டு அல்லது திருமண சான்றிதழ் என ஏதாவது ஒன்றை காட்டும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேட்டனர். இதனால் அவரது மனைவி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்த கெட்டியான்பாண்டியன் சிறப்பு முகாமில் இருந்த மரத்தில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட கலெக்டர் அங்கு வரும்வரை கீழே இறங்கமாட்டேன், என்றார்.  இதையடுத்து கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணிநேரம் கழித்து அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் சிறப்பு முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கை பறங்கிய இனத்தவரான எப்ஸிபன், கன்பூசியஸ், ரெஜிபன், இலங்கைத் தமிழர்களான   ப்ரணவன், சவுந்தரராஜன் 10க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தங்கள் மீதான வழக்குகள் முடிந்தும், 3 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டப்படி எங்களை விடுதலை செய்ய வேண்டும். அதுவரை உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்வோம். இப்போது 10க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மற்றவர்களும் பங்கேற்கும் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தனர்.


2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அன்று திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 07  போின் நிலை கவலைக்கிடமாக காணப்பட்ட படியினால் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனா். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.