தமிழ் மரபுகளை அழித்து தமிழா்களை திராவிட இனமாக மாற்றி அழிப்பதற்கே வந்தேறிகலான திருட்டு திராவிடத்தின் அரசு தமிழா்களின் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்து வதற்காக அறுவடை திருநாளான தைபொங்கள் திருநாளை தை முதல் நாள்தான் திராவிட புத்தாண்டு என்று திராவிட அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
வேளாண் குடிகளான தமிழர்கள் விவசாயம் துல்லியமாக செய்யவே முதன்முதலில் வானியலை ஆய்வு செய்ய தொடங்கினர். வேளாண் சுழற்சியின் தொடக்கமே தமிழர்களின் வேலை தொடக்கம். எனவே அதுவே தமிழர்களின் ஆண்டு தொடக்கம்.
தமிழர்கள் ஒவ்வொரு நாளையும் நான்கு மணிகளாகக் கொண்டு பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;
2 முதல் 6 மணி வரை – இராப்பொழுதின் பிற்கூறு - வைகறை
6 முதல் 10 மணி வரை – பகற்பொழுதின் முற்கூறு – விடியல் (காலை)
10 முதல் 2 மணி வரை – பகற்பொழுதின் நடுக்கூறு - நண்பகல்
2 முதல் 6 மணி வரை – பகற்பொழுதின் பிற்கூறு - ஏற்பாடு
6 முதல் 10 மணி வரை – இராப்பொழுதின் முற்கூறு - மாலை
10 முதல் 2 மணி வரை – இராப்பொழுதின் நடுக்கூறு - யாமம்
முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.
கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்
இந்த ஆறு காலங்களும் சேர்ந்து பெரும் பொழுது என்கிறார்கள். இந்தப் பெரும் பொழுதின் தொடக்கம் இளவேனில் காலம்தான். இந்தக் காலத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இம்மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பதுதான் சரி.
தை மாதம் ஆண்டிற்கான பெரும் பொழுதுகளில் முன்பனிக் காலத்தில் வருகிறது. இந்த முன்பனிக் காலமே ஆண்டின் முதல் தொடக்கமாக வைத்துக் கொண்டாலும் மார்கழி மாதம் ஆண்டின் தொடக்கமாக இருக்குமே தவிர, அதில் இரண்டாவதாக உள்ள தை மாதம் எப்படி ஆண்டின் தொடக்கமாகும்?
தமிழ் மாதங்கள் கதிரவனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகக் கதிரவனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். கதிரவன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) எனும் அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் கதிரவன் 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. அந்தப் 12 இராசிகளை;
1. மேடம் (ேமஷம்) 2. இடபம் (ரிஷபம்) 3. மிதுனம் 4. கர்க்கடகம் (கடகம்) 5. சிங்கம் (சிம்மம்) 6. கன்னி 7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம் என்று குறிப்பிடுகின்றனர்.
கதிரவன் இந்த பன்னிரண்டு இராசிக்குள் நுழைந்து அதை விட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும். கதிரவன் மேட இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரை. இவ்வாறே அடுத்துள்ள ஒவ்வொரு இராசியிலும் கதிரவன் பயணிக்கும் காலத்தை மாதங்களாகக் கொண்டு மொத்தம் 12 மாதங்கள் என கணக்கிட்டுள்ளனர்.அவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.இம்மாதங்களை நல்ல தமிழில் சொன்னால்,
1. மேழம் 2. விடை 3. ஆடவை 4. கடகம் 5. மடங்கல் 6. கன்னி 7. துலை 8. நளி 9. சிலை 10. சுறவம் 11. கும்பம் 12. மீனம் என்று சொல்லலாம்.இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம் + தேர்) என்று சொல்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் Calendar என்கின்றனர்.
தமிழ்க் காலந்தேரில் இருக்கும் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. சித்திரை மாதம் ஆண்டுக்கான பெரும் பொழுதில் இளவேனில் காலத்தில் இருக்கிறது. இந்தக் காலத்தை வசந்த காலம் என்றும் சொல்வார்கள். இந்த வசந்த காலத்தில்தான் சைவ சமயக் கோயில்கள் விழாக்கோலம் காண்கின்றன.
சித்திரையை ஏற்க மறுப்பதற்கு காரணம் 60 வருடங்களின் பெயர்களாகும். ஆனால் சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
சித்திரையை முதன்மையாக கருதியதற்கு பல சான்றுகள் உள்ளன."திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து... என்ற நெடுநல்வாடை பாடலில் "ஆடு தலையாக" என்பது மேஷத்தின் சின்னமான ஆடு, தலையான (முதல்) ராசி என பொருள்.இந்த 'ஆடு தலைக்கு', மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நுாலில் விளக்கம் கொடுத்துள்ளார் முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நுாலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்...!
பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமில் வேங்கை பூ பூக்கும் காலமாக "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை""முதல் நாளில் பூத்த பொன்னை போன்ற வேங்கை மலர்" என்ற வரிகளை குறிப்பிடுகிறார். சித்திரையில் தான் வேங்கை பூக்கும். இங்கு தலைநாள் என்பது சித்திரையை குறிப்பிடுகிறது.
12 ம் நுாற்றாண்டிற்கு முன்பாக எழுதப்பட்ட அகத்தியர் பன்னீராயிரம் என்னும் நுாலில்,"மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளு மேலானா யசுவினி முதலாம்பாதம் குலவியே கதிரவந்தான் வந்துதிக்க வருச புருசன் அவதரிப்பானென்றே பரிவுடன் உலகிற்கு நீசாற்றே"என குறிப்பிடப்படுகிறது.அதாவது, மேட(மேஷ) ராசியில் அசுவினி முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் வருசபுருஷன் அவதரிப்பான். சித்திரை முதல் தேதியே அவ்வருடப்பிறப்பாகும் என்பது பாடலின் பொருள்.....!15 ம் நுாற்றாண்டில் திருவாரூரைச் சேர்ந்த கமலை ஞானப்பிரகாசம் என்ற அறிஞர் எழுதிய புட்பவிதி என்ற நுாலில் தெய்வங்களுக்கு உகந்த பூக்களின் பட்டியலை பதிவிடும்போது,சித்திரையை முதலாகக் கொள்க சிறந்தொரு மாத புட்பம்" என்கிறார்.அதாவது சித்திரைதான் முதல் மாதம் என்று தெளிவாகவேச் சொல்கிறார்.
கோடை காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளதுசீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது."தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்''என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்ற தனது வாழ்த்துப் பாடலின் மூலம், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
1310 ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நுாலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் திருக்கோணேச்சரம், 1796ல் சித்திரை மாதத்தை தமிழர் புத்தாண்டாக கொண்டாடியது பற்றிய தகவல்களை போர்ச்சுகீசியர்களின் குறிப்புகள் தருகின்றன....!இஷ்வாகு மன்னர்களின் கி.பி., 3, 4ஆம் நுாற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநுால் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்......!
“தை முதல் நாள் தான் புத்தாண்டு” என்று அளந்து விட்ட நபர்கள் எந்தவித அறிவியல் ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் தமிழர்கள் முட்டாள்கள் என்ற முன்முடிவின் அடிப்படையில் விவசாய கால தொடக்கத்திற்கு பொருத்தம் இல்லாத ஒரு நாளை ஆண்டு தொடக்கம் என்று அறிவித்தனர். ஆனால் அவர்களின் கூற்றை தமிழர்கள் நம்ப செய்வதற்காக நமது அறுவடை திருநாளை புத்தாண்டு என்று அறிவித்தனர் தமிழ் இன அழிப்பாளா்கள்.
ஐரோப்பிய வெள்ளை இனத்தவா்களின் கிறிஸ்தவ குடிகார தினமான நத்தாா் வருடப்பிறப்பை கொண்டுகின்றவா்கள் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு அடையாளம் வேண்டுமே என்கிறார்கள்.
இதை இனி எந்த கொம்பன் வந்து சொன்னாலும் அதை அப்படியே ஏற்காமல் இந்த அறிவியல் விளக்கங்களுக்கு மறுப்பு அளிக்க செய்வோம். அப்போது தெரிந்துவிடும் அவர்களின் உண்மையான அறிவும் நோக்கமும். சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடுவோம்.