தமிழின் சமத்துவம் என்பது சமூக சமத்துவம் பாலின சமத்துவம் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற மூன்றுவகையான கோட்பாட்டைக் கொண்டது.
பிறப்பினால் அனைவரும் சமம் என்பது சமூக ஆகும் சமத்துவம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்றும் சமூகத்தில் வேறுபாடு காண முடியாது என்றும் தமிழ் எடுத்துரைக்கின்றது.
சிவனின் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் உணர்த்துவது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் உரிமைகள் மற்றும் கடமைகளின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் கல்வி, செல்வம், வீரம் என்று மனிதனின் மாண்புக்கு தேவையான மூன்றையும் அருளுகின்ற தெய்வங்களாக பெண் தெய்வங்களாகவும் தமிழையும் தமிழின் தாயாகவும் தமிழ்திருநாட்டை நாட்டை தாயாகவும், ஓடுகின்ற நதிகளை பெண் தெய்வங்களாகவும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று அன்னைக்கே முதன்மை கொடுத்தும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் என்று உலகில் முதல் முதல் பேசியது தமிழ்.
உலகில் முதல் முதலாக மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துகள் ஆங்காங்கே பரவிக் காணப்படுகின்றன அத்துடன் தமிழின் நீதி நெறிகோவைகள் என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமத்துவமானவா்கள் என்பதாகும்
தமிழின் சமத்துவம கோட்பாட்டு நெறிகளை நிராகாித்து அன்னியா்களினால் தமிழிலிருந்து திருடப்பட்டு உருவாக்கப்பட்ட சமத்துவ கோட்பாடுகளை அன்னியா்களின் அடையாளங்களுடன் தமிழருக்குள் திணிப்பது தமிழின அழிப்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.