சங்ககாலம் தொடக்கம் தமிழா்களின் அரசியல் கோட்பாடுகள் திருக்குறள் உட்பட பல சங்க இலக்கிய நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. அரசியல் என்பதற்கு (Politics) ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல் உலகப்பொதுமையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய் பேசுகிறது. அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும் அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் குறித்த அடிப்படையை உணர்வதற்கு அவசியமாகின்றன.
சங்ககால தமிழா்களின் அரசு என்பது, மக்கள் கூட்டம், நிலப் பரப்பு, அரசாங்கம் மற்றும் கொண்ட இறைமை ஆகிய நான்கு கூறுகளையும் பலசிற்றரசுகளை கொண்டதாகவும் நாட்டின் நிலப்பகுதியானது மைய அதிகாரம் கொண்டதாக காணப்பட்டது.
தமிழின் அரசியல் அறநெறிகள் அக்காலத்தேவை கருதி சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது,
தமிழின் அரசியல் அரசு செயல்படவேண்டிய முறைகளின் நுட்பங்களை எடுத்தியம்புகிறது. அதிகாரங்களில் அரசனின் இயல்புகள், மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள், அவன் ஆற்றவேண்டிய கடமைகள் அரசினுடைய சட்டம் இயற்றுகின்ற முறை, சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற முறை, சட்ட நடைமுறையாக்கத்தைக் கண்காணிக்கும் முறை, குற்றமிழைப்போருக்கு நீதித்துறை மூலம் தண்டனை விதித்தல் முறை, சமூகபணிகளை நிறைவேற்றுகின்ற பொறுப்பை சைவ ஆலயங்களின் ஊடாகமேற்கொண்ட பொறிமுறை நாட்டின் சிறப்பு, நாட்டில் வாழும் மக்களின் சிறப்பு போன்ற செய்திகளை, இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றம் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம் ஒற்றாடல், ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய பல சிறப்பியல்வுகளை கொண்டதாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டது.
தமிழின் அரசு எப்படி இயங்க வேண்டும். அரசு எவ்வாறு செலுத்தப் படவேண்டும் என்பதை அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறது தமிழ்.
அரசின்கீழ் இயங்கும் நாடானது, பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென நாடு இருக்கவேண்டிய இயல்பினை தமிழ் எடுத்துரைக்கின்றது.
சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கின்றது தமிழ்.
குடிமக்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுக்குத்துச் சமுதாயத்தை மேன்மையுறச் செய்யும் அரசையும் அரசனையும் இவ்வுலக உயிர்கள் அடைக்கலமாகக் கொண்டு வாழும் என்கின்றது தமிழ்.
குடிமக்களை வருந்தவிடாமலும் தானும் வருந்தாமலும் மக்களைக் காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவர்க்கு தண்டனையளித்துத் தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர் எனவும். குற்றத்தை கடிந்துரைத்தல் ஆள்பவருக்கு வடுவாகாது. மாற்றாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும் என்கிறது என்கின்றது தமிழ்.
நாட்டை ஆளும் அரசுக்கு துணைநிற்பவர்கள் அமைச்சர்கள். இம்மரபு அக்காலம் தொட்டே ஆட்சிமரபாக இருக்கின்றமையைக் காணமுடிகிறது. நாட்டை ஆள்பவர் முதல்வராகிறார். முதல்வருக்குத் துணையாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவ்வமைச்சர்கள் எங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுதல் நலம் என்பதை அமைச்சு அதிகாரத்தின்வழி என்கின்றது தமிழ்.
அறநெறியினை நன்கு உணர்ந்தவராகவும், சொற்திறன் கொண்டவராகவும், செயல்திறன் உடையவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக அரசுக்கு விளங்க முடியும் என்கின்றது தமிழ்.
குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை தமிழ் வலியுறுத்துகின்றது.
நாடானது குறைவில்லாத விளைச்சலைப் பெற்றுவிளங்குதலும், அதன்வழி குறைவிலாது அறநெறி அறிந்தவர் வாழ்தலுமாகிய பண்புகளைக் கொண்டநாடு செல்வமிக்கோர் நாடாகச் சேரும் என நாட்டினுடைய இயல்பினை இயம்புகிறது தமிழ்.
நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக சாடுகின்றது தமிழ்.
நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது தமிழ்.
மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும் என்று தமிழ் வாழ்த்துகின்றது.
தமிழின் அரசியல் நெறிகோவைகள் அனைத்தையும் நிராகாித்து துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பது மார்க்சிய லெனினிய மாசேதுங் ,கிறிஸ்தவ சிலுவை யுத்த சிந்தனைகளை கோட்பாடுகளாக நிறுவி நடாத்தப்பட்ட தமிழீழ விடுதலை போராட்டம் தமிழின் அரசியல் கோட்பாட்டை அழித்து அதன் ஊடாக தமிழ் அழிப்பும் தமிழ் இன அழிப்பும் கலந்த தமிழீழ போராட்டம் ஆகும்.
தமிழீழ போராட்ட களத்தில் தெய்வீக தமிழின் வாழ்வியல் நெறிகளை நிராகாித்து சிவபூமியான இலங்கையின் கலை கலாச்சார பண்பாடுகளை நிராகாித்து தமிழீழ போராட்ட காலத்தில் கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் பேசிக் கொண்டு தங்களுக்குள் டதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகளாக பிாிந்து நின்று நடாத்திய போராட்டம் தமிழ் அழிப்பும் தமிழ் இன அழிப்பும் கலந்த தமிழீழ போராட்டம் ஆகும்.
தமிழின் அரசியல் நெறிகோவைகள் அனைத்தையும் நிராகாித்து துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பது மார்க்சிய லெனினிய மாசேதுங் ,கிறிஸ்தவ சிலுவை யுத்த சிந்தனை தமிழீழ போராட்டத்தில் உங்களின் சகோதரங்கள் உறவினா்கள் நண்பா்களை கொலை செய்து முடித்தாா்கள், அத்துடன் உங்களின் சகோதரங்கள் உறவினா்கள் நண்பா்களின் சொத்துக்களை கொள்ளையடித்தாா்கள் நாசம் செய்த போராட்டமே துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற மார்க்சிய லெனினிய மாசேதுங் ,கிறிஸ்தவ சிலுவை யுத்த சிந்ததமிழ் அழிப்பும் தமிழ் இன அழிப்பும் கலந்த தமிழீழ போராட்டம் ஆகும்.
சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத சுடலையை சென்றடைவீா்கள் என்பதனை என்றும் மறத்தல் கூடாது. அத்துடன் இலங்கை சிவ பூமி என்பதை ஒரு போதும் மறக்கலாகாது.
ஆக்கம் அருளகம் சிவபுரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.