11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 டிசம்பர், 2021

தமிழின் பொருளாதாரம் (பொருளியல்) கோட்பாடு.

 ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது என்பதனை  அறிந்த தமிழ் பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியலானது  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் உலகிற்கு  அருளிய கோட்பாடு ஆகும்.

அறம், பொருள், இன்பம் என்ற படிநிலைகளில்  அறவழியில் பொருளீட்டி அதன் மூலம் இன்பம் துய்ப்பதே நல்வாழ்க்கை என்று தமிழ் தன் மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றது.  அத்துடன் ஒரு அரசாங்கத்துக்கு நல்ல திட்டங்களை உருவாக்கத் தெரிய வேண்டும். உருவாக்கிய திட்டங்களை காப்பாற்ற தொியவேண்டும்   உருவாக்கி காப்பாற்றிய திட்டங்கள் மூலமாக உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளத் தெரிய வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருமாணத்தை பெருக்க வேண்டும் இத்தகைய நெறிக்கோவைகளில்  ஊழலுக்கு இடம் கொடுக்காமல்ஒரு சிலர் மட்டும் அனுபவித்துவிட்டுப் போய்விடாமல் காப்பாற்றத் தெரிய வேண்டும் அப்படிக் காப்பாற்றியதை எல்லாம் அனைவருக்கும் பாகுபாடு இன்றிக் கிடைக்கும் படி பிரித்துக் கொடுக்கத் கூடிய வல்லமையும் கொண்டதாக அரசாங்கம் இருக்க வேண்டும் என்று தமிழ் கூறுன்றது இதுதானே தமிழின் பொதுவுடமை . சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் செயலுக்கு ஆதரவு கொடுக்கின்றது தமிழ் .

தமிழ் இவற்றோடு மட்டும் நின்று விடவில்லை. அது பொருளாதாரத் தடை பற்றியும் பேசுகின்றது. ஒரு நாட்டுக்கு பிற நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பொருளாதாரத் தடையை விதிக்கக் கூடும். அப்படி விதித்தால் அதை உடைத்தெறியும் கடமை அரசினுடையது அல்ல. அந்த நாட்டு மக்களுடையது என்பதை தமிழ் எடுத்துக் கூறுகின்றது.  அத்துடன் மக்கள் அரசை ஏமாற்றாமல் தாம் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முழுமையாகக் கட்டுவது ஒன்றதான் பொருளாதாரத் தடைகளில் இருந்து தம் நாட்டை மீட்கும் வழி என்று அறுதியிட்டு கூறுகின்றது தமிழ் . பொருளாதாரத் தடைக்கு உள்ளான நாட்டு மக்கள் வரி ஏய்ப்புச் செய்யச் கூடாது! இது சொல்லப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம். பழந்தமிழரின் சிந்தனைத் திறனுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

தமிழின் பொருளாதாரம் (பொருளியல்) கோட்பாடுகளை நிராகாித்து தமிழீழ போராட்ட களத்தின் கோட்பாடாக கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களின் துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே பொருளாதாரம் குவிகின்றது என்று கூறி நிறுவி தமிழின் பொருளாதாரம் (பொருளியல்) கோட்பாடுகளை சிதைத்தாா்கள்.

அத்துடன் தங்களுக்குள்  இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகளாக பிாிந்து நின்று உங்களின் சகோதரங்கள் உறவினா்கள் நண்பா்களை கொலை செய்து முடித்தாா்கள், அத்துடன் உங்களின் சகோதரங்கள் உறவினா்கள் நண்பா்களின் சொத்துக்களை கொள்ளையடித்தாா்கள் நாசம் செய்து முடித்தாா்கள்.

ஆகவே சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத சுடலையை சென்றடைவீா்கள் என்பதனை என்றும் மறத்தல் கூடாது. அத்துடன் இலங்கை சிவ பூமி என்பதை ஒரு போதும் மறக்கலாகாது.

ஆக்கம் அருளகம் சிவபுரம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.