இணையத்தில் மடு மாதா தேவாலயம் என தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேடிப்பாருங்கள். விக்கிபீடியா தமிழில் உள்ள கட்டுரையில் 2008 ஆம் ஆண்டு இலங்கை இரணுவத்தால் ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
அதே விக்கிப்பீடியா சிங்களத்தில் உள்ள கட்டுரையில், புலிப் பயங்கரவாதிகளால் ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இராணுவத்தினரால் LTTE பயங்கரவாதிகளிடமிருந்து தேவாலயம் மீட்கப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
விக்கிபீடியா ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையில் சிவில் யுத்தத்தில் மடு தேவாலயம் தாக்கப்பட்டதாகவும் பொதுவாக எழுதப்பட்டுள்ளது. இது தான் அவர்களின் பச்சோந்தித் தனம். இந்த விஷமத் தனத்தைத்தான் விலாங்குபோல் "பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதாக" தமிழர்கள் சொல்வார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு தளங்களிலும் இவ் அன்னிய சக்திகளால், சகோதர தமிழ் சிங்கள இனங்களுக்கிடையே தூண்டி விடப்படும் இன விரோதப் போக்கை ஒவ்வொரு இலங்கைவாழ் தமிழ்ச் சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவ பறங்கியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை புரிந்து கொள்முயற்சிக்கும் போதுதான் இலங்கை இனப்பிரச்சினைக்கான உண்மையான தீர்வை நாம் அடையமுடியும்.
ஆனாலும் அவர்கள் அனைத்துமொழிக் கட்டுரைகளிலும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உண்மையைப் பதிவு செய்துள்ளார்கள். அது மடு தேவாலயம் என்பது கிறிஸ்தவ தலமல்ல என்பதும், அது தமிழ் சிங்கள மக்களுக்கான பொதுவான தலமாக உள்ளது என்பதுமாகும்.
ஆம், அது கஜபாகு என்ற சிங்கள மன்னனால், சேரன் செங்குட்டுவனிடம் இருந்து புனித புத்த தந்தத்தை பெற்றமைக்கு பிரதியுபகாரமாக எழுப்பப்பட்ட கண்ணகி ஆலயமே அது. சிங்கள தமிழ் மக்கள் கொண்டாடிய அம்மனின் ஆடித்திருவிழாவே இன்றுவரை தொடர்கிறது. மீண்டும் ஒருநாள் அந்த ஆடிப்பெருவிழா கொண்டாடப்படும். கஜபாகு மன்னனின் பெயர் தாங்கி கண்ணகி மீண்டும் கோயில் உருவாக்கப்படும். அந்நாளே சதிகார பறங்கியர்களின் சூழ்ச்சியில் இருந்து நீங்கிய தமிழ் சிங்கள மக்களின் அழகிய இலங்கையின் இரண்டாம் சுதந்திர நாளாகும். அந்த நாளை நோக்கியே இலங்கையின் மைந்தா்கள் நகருதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.