ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழிகள் கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்டவன் தமிழன் என்று அடையாளப்படுத்தும்.
தமிழ் ஆண்களாயின் நெற்றியில் திருநீற்றை உடையவன். அறிவு, நிறை, ஓர்ப்பு,கடைப்பிடி,நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் கொண்டவா்களாகவும் காணப்படுகின்றவா்கள் மட்டுமே தமிழா்கள்.
தமிழ் பெண்களாயின் தலை வாாி பூச்சூடி நெற்றியில் திருநீறும் பொட்டும் உடையவள். அத்துடன் தமிழ் காலாச்சார பண்பாட்டு தேசிய உடையுடன் காணப்படுபவா்கள் மேலும் பெண்களுக் குரியதென மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட அகப்பண்புகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளை கொண்டவாகளாகவும் காணப்படுகின்றவா்கள் மட்டுமே தமிழ் பெண்கள் என்று அடையாளப்படுத்தப்படுவாா்கள்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.