11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 9 ஜனவரி, 2023

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையை நடாத்திய கத்தோலிக் மதத்தின் மதகுரு பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார்.

வரலாற்றை படிக்காத இனம் மீண்டும் அதே வரலாற்றில் விட்டில் பூச்சிகளை போன்று வீழ்ந்து மடிய வேண்டிவரும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவா் கத்தோலிக்க மதத்தின் மதபோதகரும் பறங்கிய இனத்தவருமான சேவியர் தனிநாயகம் அடிகளார்.

அகில இலங்கை தமிழ் காங்கரசில் இருந்து சாமுவேல் ஐேம்ஸ் செல்வநாயகம் அவா்களை பிாித்து எடுத்து தமிழரசுக் கட்சியை நிறுவித்தவா், அரசியல் ரீதியாக தமிழ் இனத்தை இரண்டாக பிளந்து மோதவைத்தாா் கத்தோலிக் மதத்தின் மதகுரு பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார்.

 மதகுரு பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார்இலங்கையில்  மன்னாா் மாவட்டத்தை கிஸ்தவ மயமாக்கி தமிழ் தேசியத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில்  1940 களில்  அல்பர்ட் அழகக்கோன்  (Albert Alegacone)  மன்னார் நகரசபை  தேர்தலில் சுயேச்சையாக நிறுத்தி வெற்றியடைய வைக்கப்பட்டவா் நகரசபைத் தலைவராக கொண்டுவருவத்கு நகரசபை மட்டத்தில் பல சதிகளை மேற்கொண்டு 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்ற அமர்த்தியவா். இதன் மூலம் சுயேச்சையாக கேட்டு வெல்ல வைக்கபபட்டவர் தலைவரானாா்  என்ற வரலாற்று உருவாக்கினாா்.

1947 முதல் 2023 ஆம் வரை தொடா்ச்சியாக கத்தோலிக்க மதத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் தமிழ் பூமி அழிக்கப்படுகின்றது. சிங்கள போினவாதம் மன்னாா் தமிழ் பூமியை என்றும் அழிக்கவில்லை.

 இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு ஜனவாி 3 ஆம் திகதி நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ் இனத்தை   படுகொலை செய்தவா்கள் கத்தோலிக் மதத்தின் மதகுரு பாதிாியாா் சேவியர் தனிநாயகம் , கத்தோலிக்க மதத்தை சோ்ந்த சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமாவோ சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா, சிங்கள மொழி பேசிய கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பறங்கிய இனத்தவனான The Inspector General of Police, Don Stanley Ernest Perera Rajapakse Senanayake (23 August 1917 – 18 December 1989) , தமிழரசுக் கட்சியை நிறுவிய சாமுவேல் ஐேம்ஸ் செல்வநாயகம்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவாி 3 ஆம் திகதியில் இருந்து இலிருந்து ஜனவாி 09 வரை மட்டுமே பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார் பொலிஸ் தலைமையகத்தில்  அனுமதி கேட்டு விண்ணப்பித்து அதற்கான அனுமதியும் பெற்று இருந்தாா்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்  ஜனவாி 3 ஆம் திகதியில் இருந்து  ஜனவாி 09 வரை எதுவிதமான குழப்பங்களும் இடம்பெறவில்லை. 

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடா்ச்சி என்ற பெயாில் சட்டவிரோதமான முறையில் பொலிஸ் தலைமையகத்தின்  அனுமதி இன்றி ஜனவாி 09 ஆம் திகதி  பொதுமக்கள் பெருமளவு பங்கு பற்றும் நிகழ்ச்சியாக கூட்டி இருந்தாா்கள் தமிழரசு கட்சியினா். 

ஜனவாி 3 ஆம் திகதியில் இருந்து  ஜனவாி 09 வரை நடைபெற்ற அனைத்தையும் நீங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸ் தலைமை காாியாலயத்தில் பெற்று பாா்க்கவும்.

1974  ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி  மாநாடு என்ற பெயாில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் சட்டவிரோதமானது என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு  பிரகடணம் செய்து பொலிஸாரை அனுப்பி  கூட்டம்  அனுமதி பெறப்படவில்லை ஆகவே அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறியது.

அப்பொழுது சேவியர் தனிநாயகம் அடிகளார் எழுந்து பொலிசாரை நோக்கி  நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் வீரமறவர்கள் இங்கு கூடியிருக்கின்றாா்கள் அவர்கள் எதற்கும் அஞ்சமாட்டாா்கள்  மறவர் கூட்டமே எழுக என்று கூறி தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கு உசுப்பேத்தி விட்டாா்.  

தமிழரசு கட்சியின் தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை சிறிமா அரசுக்கும் அதன் கூலிபடைகளுக்கும் உரக்க சொல்வோம் என்று கூறிக் கொண்டு முதலில் செருப்பால் பொஸிசாரை நோக்கி எறிந்து கலவரத்தை உருவாக்கினாா்கள்.

கலவரங்களை அடக்குவதற்காகவும் சட்டவிரோத கூட்டத்தை கலைப்பதற்காகவும் காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன பல தமிழர்களின்  மரணங்களுக்குக் காரணமாயின. 

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் கண்ணீா் அஞ்சலி.

1974  ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி  மாநாடு பொலீஸ் அனுமதி பெறப்படவில்லை என்பதனை மறைத்தது ஏன்?

 தமிழ்சுடா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.