சுமத்திரன் மாவை மோதல் காரணமாக தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுகின்றாா் சுமத்திரன்.
மாவை சேனாதிராசா செயற்றிறனோடு இல்லாத காரணத்தால் இலங்கை தமிழரசுக் கட்சி எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வமான முடிவுகளை கூட காப்பாற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா. சம்பந்தன் அவா்களின் அரசியல் தலைமைத்துவ வாாிசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மாவை சேனாதிராசா அவா்கள் செயற்றிறனோடு இல்லாத காரணத்தால் கட்சிக்குள்ளே இருக்கின்ற நாம், அந்த நிர்வாகத்திறன் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோாி போராடுவோம். எமது போராட்டம் தோற்கடிக்கபடுமானால் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதியின் இராஜினாமா செய்தது போன்று நாங்களும் வெளியேற வேண்டிய நிலை தான் வரும்.
https://www.youtube.com/watch?v=QJHa3IqbdDk&ab_channel=IBCTamilTV
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.