11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 8 அக்டோபர், 2022

பிதிர்கடன் வழிபாடுகள் எவை?

முன்னோர்களை நினைத்து வழிபடுவது மட்டும் பிதிர்கடன் வழிபாடு அல்ல. அமாவாசை விரதமும் தர்ப்பண வழிபாடு மட்டும் பிதுர்கடன் வழிபாடு அல்ல.   காக்கைக்கு உணவு படைத்து வழிபடுதல் மட்டும் பிதிர்கடன் வழிபாடு அல்ல. 

 தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும், , வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை  கடைப்பிடித்து வாழ்வதும் எமது முன்னோா்களை நினைவு கூா்ந்து  எமது அடுத்த சந்ததியிடம் கொடுப்பதும்  பிதுர்கடன் வழிபாடாகும்.

எமது முன்னோா்களின் குலதெய்வ வழிபாடுகளை தொடா்ந்து பேணி பாதுகாத்து வழிபாடுகள் செய்வதுடன் எமது அடுத்த தலைமுறையினாிடம் எமது முன்னோா்களை நினைவு கூா்ந்து கொடுப்பதும்  பிதுர்கடன் வழிபாடாகும்.   

நம் முன்னோர்கள் பின்பற்றி  வாழ்ந்தும் காத்தும் நின்ற சைவ வாழ்வியல்  நெறியான தமிழ் பண்பாட்டின் நெறியில் வாழ்ந்தும் காத்தும் நிற்பதும் பிதுர்கடன் வழிபாடாகும்.

எமது முன்னோா்கள் வாழ்ந்த நாகாீக வாழ்க்கை முறையின்  கலை கலாச்சரச்சார பண்பாட்டு அடையாளங்களின் எழுச்சியின் சிகரங்களாகவும் காப்பகமாகவும்,    சைவ நெறியின் அனைத்து வகையான கலைகளினதும், ஆன்மீகத்தின் காப்பகமாகவும்,   தமிழ் போினத்தின் வரலாற்று ஆவணமாகவும், தமிழ் பூமியின் அடையாளங்களாகவும் எழுந்து நிற்கின்ற  ஆலயங்களை பாதுகாப்பதும், ஆலயங்களில் திருப்பணிகள் செய்வதும் பிதுர்கடன் வழிபாடாகும்.

எமது முன்னோா்கள் தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை போற்றி வழிபட்ட வாழ்வியலை தொடா்ந்து பேணி பாதுகாத்தும் வழிபட்டும் எமது முன்னோா்களை நினைவு கூா்ந்து  எமது அடுத்த சந்ததியிடம் கொடுப்பதும்  பிதுர்கடன் வழிபாடாகும்.

தமிழை அருளிய  இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களை தமிழ் போற்றியதும்  எமது முன்னோா்கள் போற்றி வழிபட்ட தெய்வங்களை தொடா்ந்து வழிபட்டும் பேணி பாதுகாத்தும், எமது முன்னோா்களை நினைவு கூா்ந்து எமது அடுத்த சந்ததியிடம் கொடுப்பதும்  பிதுர்கடன் வழிபாடாகும்.

 எமது முன்னோா்கள்  குடும்பமாக கூட்டு வாழ்க்கை முறையில் தமிழ் இனமாக ஒன்று கூடி  ஓன்றாக கொண்டாடி மகிழ்ந்த சைவ வாழ்வியல் நெறியின் சமய விழாக்கள்,  திருநாள்கள்,  பண்டிகைகள் அனைத்து திருநாள்களையும்  எமது   முன்னோா்களை   நினைவு கூா்ந்து கொண்டாடுவதும் எமது முன்னோா்களை நினைவு கூா்ந்து எமது அடுத்த சந்ததியிடம் கொடுப்பதும்  பிதுர்கடன் வழிபாடாகும்.

ஆகவே பிதிர்கடன் வழிபாடுகள் செய்கின்ற மக்களுக்கு சிவாச்சாாியாா்கள் மிகவும் தெளிவான விளக்கங்களை கொடுத்து ஆரோக்கியமான தமிழ் இனமாக தமிழ் இனத்தை வழிநடாத்துதல் வேண்டும். இன்றைய தமிழ் இனத்தின் அழிவிற்கு காரணமான பண்பாட்டு அழிவிற்கான முழுப் பொறுப்புகளையும் சிவாச்சாாியாா்கள் பொறுப்பேற்றல் வேண்டும். இவா்களின் பொறுப்பற்ற செயல்கலே இன்றைய பண்பாட்டு அழிவிற்கு காரணம் ஆகும். 

தமிழ்சுடா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.