கரியாலை நாகபடுவான் கிராம அலுவலரின் ஊழல்கள்
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரியாலை நாகபடுவான் கிராம அலுவலராக ஒன்பது வருடங்களாக கடமையாற்றி வருபவர் மரியசுபாசினி.இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும் தொடர்ந்து ஒரே பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றி வருவது தொடர்பில் அக்கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது
கரியாலை நாகபடுவான் 35 ம் வாய்க்காலில் குறித்த கிராம அலுவலரின் தந்தையின் நண்பர் லிங்கேஸ் என்பவர் அரசகாணியை பிடித்து வயல் செய்து வரும் நிலையில் அந்நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் கிராம அலுவலரால் எடுக்கப்படவில்லை. இது போல் மன்னார் யாழ் நெடும்சாலையில் நாச்சிக்குடா சந்திக்கு அண்மையில் தனி நபர் ஒருவர் 7 ஏக்கர் காணியை பிடித்துள்ளார். இந்த நபருக்கு எதிராக இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே வேளையில் வழக்கு முடிவடைந்த நிலையில் ஞானம் என்பவர் பிடித்த காணியை தொடர்ந்து செய்கைக்கு அனுமதித்து வருகிறார். மேலும் பயனாளி ஒருவருக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுதிட்டத்துடன் கூடிய காணியை சட்டத்திற்கு உட்படாது மத நிறுவனம் ஒன்றிற்கு வழங்கவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் கிராம அலுவலர்.
பல இளைஞர்கள் தொழில் இன்றி இருக்கும் நெருக்கடியான காலப்பகுதியில் கடைகாணிகள் வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டநிலையில் வெளிநாட்டில் இருக்கும் தனது காதலன் கடை ஒன்று கட்ட இருப்பதாகவும் அதற்கு 20பேர்ச் காணி தேவைபடுவதால் குறித்த காணிகள் வழங்கவுள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள நீர்பாசன காணியில் எனது அப்பம்மா மீன் வியாபாரம் செய்தது என ஓர் ஆவணத்தை வழங்குமாறு நீர்ப்பாசன தொழில்நுட்ப அதிகாரியை நாடியுள்ளார் கிராம அலுவலர்
கிராம அலுவலருக்கான கடமை நேரம் காலை 8.15 மணிமுதல் மாலை 4.15 வரையாகும். இக்கிராம அலுவலர் உரிய நேரத்திற்குவருகை தருவதுமில்லை .அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் அலுவலக கதவை உட்புறமாக தாழிட்டுவிட்டு தனது காதலனோடு தொலைபேசியில் கடமை நேரத்தில் உரையாடி வருகின்றார்.
எனவே இக்கிராம அலுவலர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை உயர் அதிகாரிகள் முன் வைக்கின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.