11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 2 மார்ச், 2022

திருக்கேதீச்சரம் பாதுகாப்பு இயக்கம்.

 சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இலங்கையின் அனைத்து "சைவ /இந்து" அமைப்புக்களும் இணைந்து "திருக்கேதீஸ்வரத்தை" பாதுகாத்து அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு விட்டுச்செல்லும் முகமாக "கையெழுத்து இயக்கம்" ஒன்று நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருக்கேதீச்சரம் வளாகத்தில் "கையெழுத்து வேட்டையை" ஆரம்பித்து வைத்தமை ஒரு மகிழ்வான திருப்தியை வழங்கியது. பிற்பகல் 2 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை இதனை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற சிவ தொண்டர்கள் இனிவரும் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறித்த கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துச்செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

'திருக்கேதீச்சர ஆலைய வளைவு" மற்றும் "யாத்திரி மடம்" அமைப்பதற்கு காணப்படும் தடைகளை அகற்றி, தமிழர் பாரம்பரிய அடையாளங்களை காப்பது இதன் குறிக்கோளாகும். ஆவணம் செய்யப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் பிரதமர், இந்து கலாச்சார நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழர்களுடைய பாரம்பரியத்தை காக்க விரும்புபவர்கள், உங்களுடைய பிரதேசங்களில் வாழும் மக்களிடம் இருந்தும் கையெழுத்துக்களை வாங்கித்தர விரும்புபவர்களும்  தொடர்புகொள்ளவும்.

+94 77 291 4996

நன்றி 

வினோத் பாலச்சந்திரன்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.