பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்....
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்..
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இன்னும் பற் பல நாள் இருந்தாலும்
இக் கணம் தனிலே இறந்தாலும்.
துண்ணும் வான் கதி கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துள் உழன்றாலும்
என்னமே இங்கு எனக்கு வந்தாலும்
என்பிரான் எனக் யாது செய்தாலும்..
நன் நல்நெஞ்சகம் நாடி நின்றோங்கும்.
நமசிவாயத்தை நான் மறவேனே.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்.
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.