11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 12 மார்ச், 2022

இலங்கை எதற்காக முன்னேறவில்லை?

 வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள  மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது.

வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள   மலேசியா முன்னேறிவிட்டது.

வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள டென்மார்க் முன்னேறிவிட்டது.

வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது.

வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது.

வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள  ஜப்பான் முன்னேறிவிட்டது.

வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள அமெரிக்கா முன்னேறிவிட்டது.

வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் நம்பியுள்ள ரஷ்யாவும் முன்னேறிவிட்டது.

இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும்

தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க நீர்வளம், நிலவளம், மலைவளம் வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம், இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல் அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு  முன்னேறாமைக்கு காரணம் பறங்கிய இனத்தவாின் மதவெறி அரசியல் ஆகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.