யுத்த காலத்தின் போது தன்னை வந்து சந்தித்த அமெரிக்க தூதரும் இந்திய தூதரும் விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அரசியல் தீர்வை கொண்டு வருவோம் - அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் எனக் கோரியதாக கடந்த காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் பறங்கிய இனத்தை சோ்ந்த நிக்சன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்காவும் இந்தியாவும் தங்களை ஏமாற்றிவிட்டது என்று, சம்பந்தன் 2020ஆம் ஆண்டு தை மாதமளவில் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார் எனவும் கூறினார்.
சம்பந்தனைப் பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் நாடாளுமன்றத்தில் பல்வேறு விடயங்களை கூறியிருக்கின்றார்.குறிப்பாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரங்களோடு சமர்ப்பித்திருக்கின்றார்.
ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் அவர் அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என மூத்த பத்திரிகையாளர் பறங்கிய இனத்தை சோ்ந்த நிக்சன் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் விடயங்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் நோக்கம், அதன் மாறுபட்ட நிலை தொடர்பில் அவர் தெரிவிக்கும் விடயங்களை காணொளியில் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.