🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
1980 ஆம் ஆண்டுக்குக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு , கோழிகள் வளர்ப்பார்கள்.இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது. கோழிக் குஞ்சு 1.00 ரூபா முட்டை 20 சதம், ஒரு போத்தல் பால்80 சதம்ஆனால் தற்போதைய விலைகள் ---?
கிராமங்களுக்குச் சென்றால் எல்லா வீடுகளிலும் ஆட்டுப்பட்டி இருக்கும்.கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும்.கூலி வேலை செய்பவர்கள் வீடு உட்பட.வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில் ஆடுகளுக்கு தீவனம் போடுவதற்காக வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள். அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன, தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம்.ஆனால் அப்படிச்செய்ததில்லை. ஞாயிற்றுக் கிழமையானால் கறிச்சோறு தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை.
தமிழ் ஈழ போராட்டத்தின் விளைவாக ஆடு கோழி மாடு வளர்ப்புகள் கணிசமாக குறைந்துவிட்டது. அத்துடன் உணவிற்காக அழிக்கப்பட்டும் விட்டது. இதன் காரணமாக முட்டை பால் பொருட்களின் விலைகள் அதிகாித்து விட்டன.
ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் அசைவ உணவகங்கள் இரவு நேரங்களில் சாராய வெறியுடன் கறிக்கடைகளில் கூட்டம் அலை அலையாக மோதுகின்றது. அசைவ உணவகங்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கின்றது? அத்தனையும் சுத்தமான , சுகாதாரமான ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்ய யாரால் முடியும்?
நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகள் , கோமாரி நோயால் செத்த மாடுகள் மற்ற நாலுகால் பிராணிகள் கறி என இப்படி எல்லா இறைச்சிகளும் கலந்து விற்கத்தான் செய்வார்கள்.
கறியில் கலக்கப்படும் எக்கச்சக்கமான மசாலாக்கள் , நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் சாராய வெறியுடன் கறிக்கடைகளில் மோதுகின்றவா்களாள் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது.
ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் தமிழ் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவதால் மட்டுமே முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.