1. "பிறவா யாக்கைப் பெரியோன்"
இந்திர விழவூரெடுத்த காதை:170-வது வரி
2. "செஞ்சடை வானவன் அருளின் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்"
-கால்கோள்காதை: 98-99
3. "நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி’’
-கால்கோள்காதை: 54-55
4. "தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்"
-கால்கோள்காதை: 64
5. "பெரியோன் தருக திருநுதல் ஆகஎன’’
-மனையறம் படுத்த காதை: 41
6. "திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்"
-கடலாடு காதை: 38-43
7. ‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்"
-நடுகற் காதை: 67-70
8. "ஓங்குயர் கூடல் ஊர்துயில் எடுப்ப
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்"
-ஊர்காண் காதை: 6-7
9. "அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்"
-புறஞ்சேரி இறுத்த காதை: 137
10. "ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்"
-வரந்தரு காதை: 141-142
11. "நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக"
-விழாவறை காதை: 54-55
12. "ஆலமர் செல்வன் மகன்
விழாக் கால்கோள் காண்மினோ"
-மலர்வனம் புக்க காதை: 144-145
முருகனுக்கு விழா எடுத்த நிகழ்வு பற்றி கூறுமிடத்து!
13. "இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும்.."
- சமயக்கணக்கர் தம் திறம்கேட்ட காதை 89-90
ஈசனின் இயல்புகள் மிகத்தெளிவாக எடுத்தியம்பப்பெற்றுள்ளது!
14. "மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்.."
பரிபாடல் 5: 25-27
15. "எயில் எயப் பிறந்த எரிபோல"
கலித்தொகை 150: 05
16. "அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த
பெருந் தண் சண்பகம் போல.."
கலித்தொகை 150: 20-21
17. "தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற் றண்ணல்.."
பரிபாடல் 9: 6-7
18. "ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல்.."
கலித்தொகை 81: 09
19. "ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்.."
புறநானூறு 198: 09
20. "கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே"
புறநானூறு 251: 6-7
21. "ஆலமர் செல்வற்கு
அமர்ந்தனன் கொடுத்த.."
சிறுபாணாற்றுப்படை 97வது வரி.
22. "நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.."
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து- 1
23. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்.."
புறநானூறு 1: 7-8
24. "...வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்.."
-திருமுருகாற்றுப்படை 151-154
25. "புங்கவம் ஊர்வோனும்.."
பரிபாடல் 8:02
26. "ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும்"
பரிபாடல் 8:06
27. "ஆறு அறி அந்தணற்கு அருமறை பல பகர்ந்து.."
கலித்தொகை கடவுள் வாழ்த்து-1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.