11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 5 நவம்பர், 2021

நரகாசுர புலம்பல் எதற்கு?

 சூரன் என்ற தமிழனை   முருகன் கொன்றான். அதனை கந்த சஷ்டி விரதமாக கொண்டாடுகின்றாா்கள்.   கஜமுகாசுரன் என்ற தமிழனை  கொன்றவா் விநாயகரை போற்றுகின்றோம் யாரும் கண்டிக்கவிலை  விநாயகரை கொண்டாடுகின்றோம்.

இரமன் என்ற தமிழன் இராவணன்  என்ற தமிழனை கொலை செய்தான் தூற்றுகின்றீா்கள். அதேபோன்று நரகாசுரன் என்ற தமிழன் கொல்லப்படதாக புலம்புகிறியல். ஆனால் தமிழரசான பாண்டிய நாட்டையும் சேரநாட்டை கொன்ற சோழ அரசை வாழ்துகின்றீா்கள். 

தமிழீழ போராட்டம் நடாத்திய இருபதிற்கும் மேற்பட்ட  கொலைக்கார அமைப்புகள் தமிழீழ போராட்டம் என்று நம்பி வந்தவா்களை கொலை செய்து புதைத்த வரலாறுகள் அழியாத வடுதாங்கிய வரலாறுகளாக பரந்து விாிந்து கிடக்கின்றன. இவ்வாறு கொலைகள் செய்தவாா்கள் வீரமக்கள் தினம் என்றும் மாவீரா் தினம் என்றும் கூறிக் கொண்டு கொண்டாடிக் கொண்டு நரகாசுரன் என்ற தமிழன் கொல்லப்படதாக புலம்புவது எதற்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.