11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 4 நவம்பர், 2021

தலைவாழை இலை போட்டு விருந்து கொடுப்பது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் ஆகும்.

 எல்லோரும் சபையில் அமா்ந்த பிற்பாடு நன்றாக கழுவி துப்பரவு செய்யப்பட்ட தரமான தலைவாழை இலையின் நுனி பகுதி இடது பக்கமாக உணவு அருந்துவதற்காக வைக்கப்பட்டும்.

அறுசுவை உணவிற்கு  உப்பு அவசியம்    சிலருக்கு சிறிது  அதிகம் தேவை படும் என்பதனால் முதலில் இடது புறம் உப்பு வைப்பது மரபு. இனிப்பு முதலில் சாப்பிட வேண்டும் என்ற சித்த ஆயூள் வேத மருத்துவ முறமைக்கு ஏற்ப இலையின் வலப்புறம் கீழே இனிப்பு வைக்கப்படும். இலையின் மேல் புறம்  ஒரு கூட்டு மூன்றாவது  கூடி கூட்டாக வாழும் முறையை சொல்ல கூட்டு பின் பொரியல்  அவியல்  வறுவல் வடை  துவையல் இடது முலையில் மேல்புறம் ஊறுகாய்  என்று அறுசுவை உணவு பாிமாற்றம் தொடங்கும்.   இதன் பிறகு தான் சாதம் பரிமாற வேண்டும்  அதில் பருப்பு  அதன் மீது நெய்  ஊற்றி  விட்டு பின் சாம்பார்  விட்டு பின் வத்தல் குழம்பு   அப்பளம்  ரசம்   மோர் பாயசம் வடைபழங்கள் என்று   இரயில் வண்டி போல்  நடக்கும் அறுசுவை உணவு பந்தி.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.