11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 11 நவம்பர், 2021

மழை வெள்ளத்தில் மக்கள் வெள்ளம் .

சமூக அக்கறை அற்றவா்களின் பொறுப்பற்ற தன்மையின் விளைவே தூர் வாரததால் தூர்ந்து போன குளங்கள் கேணிகள், ஏாிகள், நீா்தேக்க மையங்கள் ஒரு புறம். குப்பைகளினால் மூடப்பட்டதும்,    நீா்தேக்கங்கள் இருந்தால் நுளம்பு தொல்லை என்று கூறி யாழ்பாணத்தான் குளங்களை மூடினான். மேலும் வீடுகள், வியாபார நிலையங்களை சுற்றி  மதிகள்  கட்டியெழுப்பப்பட்டதன் விளைவுகளே இன்றைய மழை வெள்ளப் பெருக்குகள் ஆகும்.தற்போது பலமழை வெள்ளத்தால் அல்லோல கல்லப்படுகின்ற மறு கணமே குளத்திற்குள் காய்ந்த மண்ணை அள்ளும் நிலமைகளை இன்று காண முடியும்.

எமது காலத்தில்  ‘அண்டா’ பாத்திரங்களில் மழைநீரைச் சேகரித்தனர். செம்புகளில் நேரடி மழை நீரைச் சேகரித்தனர். இது சத்தான தண்ணீர் என்று பின்பு இரவுச்சாப்பாட்டுடன் பரிமாறினர். எமது காலத்தில் யாரும் மழையை, மழை வெள்ளத்தைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் தற்போதைய சந்ததிகள் மழை வெள்ளத்தைக் கண்டு அஞ்சுகின்றனா்

இன்று மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மாநகரம் உட்பட பல பாகங்களும் நாளை குளத்திற்குள் காய்ந்த மண்ணை அள்ளும் நிலமையே காணப்படும்.ஆபிரிக்காவில் இன்று காணப்படுகின்ற நிலமையே சென்னை மாநகரம் மிகவிரைவில் கண்டு கொள்ளும்.

எமது காலத்தில் குளத்தில் தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருந்தது கிணற்றிற்குள் தண்ணீர் இருந்தது நாம் தண்ணீர் வேண்டி தத்தளிக்கவில்லை.  சென்னை மழை வேண்டி, தண்ணீர் வேண்டி தத்தளித்ததே வரலாறுகள் பல உண்டு .   






  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.