அர்த்தநாரீசுவரர் பெருவிழாவாகிய தீபாவளித் திருநாள்.
பார்வதி தேவி சிவனை நினைந்து ஊசியின் முனையில் தவம் இருந்து வழிபட்டு அதன் வழிபாட்டு பலனாக கேதார கௌரி நோன்பு விரதத்தின் இறுதி நாளான இருபத்தொராம் நாள் அமாவாசையும் நரக சதுர்த்தசியும் கூடிய தினம் திருவண்ணாமலையில் ஈசான மூலையில் பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வரா தோற்றம்மாகிய சிவசத்தியாக காட்சி கொடுத்த பெருவிழா திருநாளே தமிழா்கள் போற்றிய அம்மையப்பன் ஆகிய "தாய்-தந்தை" வடிவமாகிய தமிழா்களின் தீபாவளி பெருவிழா திருநாள் ஆகும்.
பார்வதிதேவி சிவனோடு ஐக்கியமாகி அர்த்த நாதீஸ்வராக காட்சி கொடுத்த சிவசத்தி பெருவிழா திருநாள் அன்று சிவனடியார்களின் இல்லங்கள்தோறும் எழுந்தருளி அருளாசி வழங்கிய மங்களகரமான திருநாளை தமிழர்கள் தங்களின் பெருவிழாவாக கருதி தங்களின் வீடுகள் தோறும் மங்கள தீபங்களை வரிசையாக ஏற்றி தீபாவளி பெருவிழா திருநாள்ளாக கொண்டாடுகின்றாா்கள்.
தமிழ் இலக்கியங்களில் அர்த்தநாரீசுவரர் பெருவிழா.
சிவன் பாதி, பார்வதி பாதி என்று ஆணுருவம், பெண்ணுருவம் இணைந்து இருப்பதால் தான் அர்த்தநாரி + ஈஸ்வரர் (சிவன்) என்பது அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது. அதாவது சிவபெருமான் பார்வதி தேவியின் ஒன்றுபட்ட வடிவம் தான் அர்த்தநாரீசுவரர் தோற்றமாகும்.
உமையொரு பங்கன், மங்கையொரு பாகன், மாதொரு பாகன். என இந்த மூன்று பெயர்களாலும் கூட அர்த்தநாரீஸ்வரர் அழைக்கப்படுகிறார். சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கின்றது. இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம். வாழ்வியலில், ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை இல்லை என்ற பொருளையும் தருகிறது அர்த்தநாரீஸ்வரர்.
அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது. தேவார பதிகங்களிலும் "வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்" எனப்படுவது உமையொரு பாகனேயேயாம்.
இந்தியாவில் பிறமொழி இனத்தவா்களாகிய இந்துக்களின் தீபாவளி.
இந்தியாவில் பிறமொழி இனத்தவர்களான இந்துக்கள் தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் பண்டிகையாகும்.
சீக்கியர்களின் தீபாவளி.
சிவமும் சத்தியும் இரண்டற கலந்து 'அர்த்தநாரீசுவரர்' தோன்றிய பெருவிழா தினத்தில் 1577-இல் பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர். மேலும், சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த், முகலாய மன்னர் ஜஹாங்கீரின் சிறைப்பிடியில் இருந்து தப்பிய நாள் இதுவாகும்.இதன் காரணமாகவும் சீக்கியர்களும் திபாவளி பண்டிகையை ’பண்தி சோர் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி.
இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் பிறந்தவரே மகாவீரர். இவரின் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
இராமாயண இதிகாசத்தில் தீபாவளி .
மங்களகரம் நிறைந்த உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவர தோற்றமான திருநாளில்தான் தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட இராமர்- தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட தனது மனைவி சீதையுடனும் தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட தனது தம்பி இலட்சுமணனுடனும் தாயகம் திரும்பிய நாள்.
நரகாசுரன்.
திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை அர்த்தநாரீசுவரர் பெருவிழாவாகிய புனித தீபாவளியன்று கொள்ளும் பொழுது நரகாசுரன் என் இறப்புக்கு யாரும் அழக்கூடாது வருத்தப்படக்கூடாது என்னுடைய இறப்பை அனைவரும் மகிழ்வாக கொண்டாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு அமைவாக கொண்டாடப்படுகின்றது.
சிவகுற்றம்.
தமிழினதும் தமிழா்களினதும் “தாய்-தந்தை” வடிவமாகிய சிவமும் சத்தியும் இரண்டற கலந்து 'அர்த்தநாரீசுவரர்' தோன்றிய பெருவிழாவான தீபாவளி திருநாளை எதிா்ப்பதும், உமை உமையொருபாகனின் அர்த்தநாரீசுவரர்' பெருவிழா வரலாற்றை திாிப்பது சிவகுற்றம்.
சைவக் குடிகளாகிய தமிழா்களே நீங்கள் சிவகுற்றம் செய்தால் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே உங்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் உங்களின் இறந்த உடலின் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை நீங்கள் நினைவில் கொள்ளள் வேண்டும்.
வாழ்த்து.
மேகங்கள் தவறாது மழையை பெய்ய வேன்டும், வளங்கள் எல்லாம் பெருக வேண்டும், அரசு நீதியுடன் ஆட்சி செய்ய வேண்டும், உயிர்கள் யாவும் நிறைவோடு வாழ வேண்டும், சைவ நெறியில் சொல்லப்பட்ட அனைத்தும் தர்மங்கள் வளர வேண்டும். தன்னலமற்ற தமிழ் போற்றிய தெய்வீக வழிபாடுகள் பெருக வேண்டும், பெருமை மிக்க சைவ நெறிநீதி உலகமெல்லாம் பரவ வேண்டும். என்று அவனருளாளே உமைை உமையொரு பாகன் தாழ் பணிந்து வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்.
ஆக்கம் அ.அருள்செல்வன், உலக சைவ பேரவை, அருளகம்,சிவபுரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.