11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 24 செப்டம்பர், 2022

தமிழ் பூமி.

 எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்பே சிவமாக உயிர் நேயம் பேசி  தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு சமத்துவம் பேசிய தமிழின் சிவபூமி.

சிவபூமியான இலங்கை தமிழ் திருநாட்டின் தமிழ் பூமியனது  கிராமத்து பெயா்களும் அதன் வீதிகளின் பெயா்களும் பிறமொழிகள் கலப்படம் அற்ற தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட சிவ பூமியாகும்.

தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை   முழுமுதலாக போற்றுகின்ற  தெய்வீக தமிழ் பூமியாகும்.     தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன்  உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் பக்குவ நிலைக்கேற்ப  விநாயகா், முருகன், பெருமாள், இந்திரன்,வருணன், அம்மன், பஞ்ச பூதங்கள் , நவக்கிரகங்கள் என்று பல்வேறு வடிவங்களை எடுக்கின்ற இறை அருளின் பல்வேறு வடிவங்களே இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்கள் தமிழ் பூமியின் தெய்வங்களாகும். 

தமிழை அருளிய உமை உமையொருபாகனின்  கலை கலாச்சார பண்பாடுகளையும், சைவ சமய வாழ்வியல் நெறியின் பண்பாட்டு பழக்க வழக்கங்களையும், நீதி நெறிகளையும்  தமிழின் மரபு வழியாகவும் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை அடியொற்றி கட்டியெழுப்பிய இலக்கிய நூல்களின் வழியாகவும் , கலைகளின் மரபு வழியாகவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்துப் போட்ட தொல்காப்பியன் வழியாகவும், “யாதும், ஊரே யாவரும் கேளிர்” என்று உலக ஒருமையைப் பாடிய கணியன் பூங்குன்றன் வழியாகவும்,  வாழ்வியல் நெறிகளை அருளிய திருவள்ளுவாின் அறம் பொருள் இன்பம் வீடு என்ற திருக்குறளின் நாற்பாதங்களின் வழியாகவும், எம் முன்னோர்களிடம் இருந்து வழிவழியாக தலைமுறைகளால் கடத்தப்பட்டு வந்த வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை தமிழின் மரபு வழியாக கொண்ட தமிழ் சிவபூமியாகும்.

சைவ சமயமே தமிழ் மக்களை வாழ்வியல் நெறிகளுடன் வழிப்படுத்திவந்தது. சைவ சமயமே பழக்க வழக்கங்களையும் நீதி நெறிகளையும் தந்தது. சைவ சமயமே தமிழுக்குாி கலை கலாச்சார பண்பாடுகளையும் தந்தது. தமிழ் இனத்தின் முக்கிய அடையாளங்கள் சைவ சமயத்துடன் கலந்துள்ளன. சைவ சமயதத்தின் வாசனையே தமிழ்மொழியிலும் கலந்துள்ளது. சைவ சமயமே தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளாக உள்ளதுடன் தமிழ் பூமி என்றும் அடையாளப்படுத்துகின்றது.

சைவ சமயத்தின் ஆலயங்களின் திருவிழாக்கள்,  விழாக்கள்,  திருநாள்கள்,  கொண்டாட்டங்கள்,  பண்டிகைகள் கொண்டாடப்படுகின்ற பூமி தமிழ் சிவபூமியாகும்.

இலங்கை தமிழ் திருநாட்டின் தமிழ் பூமியனது  எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியின் பண்பாட்டு பழக்க வழக்கங்க நீதி நெறிகளின் எழுச்சி வடிவங்களாகவும் தமிழின் அனைத்து வகையான கலைகளும் வளா்ந்து  எழுந்து நின்ற ஆன்மிகம் நிறைந்த ஆலயங்களையும் அதன் அடையாளங்களையும் கொண்ட சைவ சமய நெறி சாா்ந்த  சிவபூமியானது  பிறமொழிகள் கலப்படம் தூய தமிழ் பெயரை அடையாளமாக கொண்ட சிவநெறி தமிழா்கள் ஆண்ட பூமியாகும்.  

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை நன்றாக பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டு எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம் கொண்ட வாழ்வியலை கொண்டது தமிழின் சிவப பூமியானது சைவெ நெறியின் ஆன்மீக பூமியாகும்.

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.