11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 14 செப்டம்பர், 2022

பயங்கரவாத தடுப்பு சட்டம்.

 பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோாி பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான போராட்டங்களை செய்யாமல் பாராளமன்றத்திற்கு வெளியே தமிழரசு கட்சியால் நடாத்தப்படும் கையெழுத்து போராட்டம் தேவையற்றது.

தமிழரசு கட்சியன் நிறுவனத் தலைவா் அமரா் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் போராசிாியா் அமரா் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் 1952 ம் ஆண்டு முதல் 1983 ம் ஆண்டு வரை இலங்கை சனாதிபதி, அமரா் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்து செயல்பட்டவர் .தமிழர்களுக்கு எதிராக பல அடக்குமுறை சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமான சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன்  உருவாக்கியதே  பயங்கரவாத தடுப்பு சட்டம் ஆகும்.

தமிழ் சிங்கம் ஆகிய இரண்டு மொழிகளால் வேறுபட்டும் பறங்கிய இனத்தால் ஒன்றுபட்டும், கத்தோலிக்க மதத்தால் ஒன்றுபட்டும் தமிழ் இன அழிப்பு என்பதில் ஒரு புள்ளியில் செயல்பட்டவா்கள் என்பதனை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது பறங்கிய இனத்தவா்களின் நடவடிக்கை.

தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி பாராளமன்றத்திற்குள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடாத்தாமல் பாராளமன்றத்திற்கு வெளியே அப்பாவி பொது மக்களை போராட்டத்திற்கு தூண்டுவதை உடன் நிறுத்துதல் வேண்டும்.

 மாவை அண்ணா முதலில் தனது மனைவியையும் மகனையும் பாராளமன்றத்திற்கு வெளியே  சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில்  ஆரம்பிக்க வேண்டும்.  அதேபோன்று ஏனைய தமிழ் பாராளமன்ற உறுப்பினா்கள் முதலில் தங்களின் மனைவியா்களையும், காதலிகளையும் அவா்களின் பிள்ளைகளையும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத் ஆரம்பிக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=d9Iezs-p7ng&ab_channel=elukainews



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.