11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 10 செப்டம்பர், 2022

முன்னோர்களை நினைவு கூறும் ( மகாளய பட்ச) வழிபாடு.

முன்னோர்களை நினைவு கூறும்  ( மகாளய பட்ச) வழிபாடுகளுடன் இனைந்து போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் வரை கிறிஸ்தவ மத நிறுவனங்களினால் கொலை செய்யப்பட்ட  எமது  தமிழ் இனத்தவா்களையும் நினைவு கூறுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.

அதேபோன்று எமது எதிா்கால சந்ததிகள் தங்களின் முன்னோர்களை நினைவு கூறுவதுடன்  போா்த்துக்கீசாின் காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம்வரை ஐரோப்பிய கிறிஸ்தவ மத நிறுவனங்களினாலும் இஸ்லாமிய மத நிறுவனத்தினாலும் கொலை செய்யப்பட்ட எம் தமிழ் இனத்தவா்களை நினைவு கூா்ந்து வழிபாடுகள் செய்தல் அவா்களது வரலாற்றுக் கடமையையாகும்.

  இன்று நீங்கள் உங்களின் முன்னோா்களையும், கிறிஸ்தவ மத நிறுவனங்களினால் கொலை செய்யப்பட்ட எம் தமிழ்  இனத்தவா்களையும் நினைவு கூற மறுத்தாள் நாளை உங்கள் சந்ததிகளும் உங்களை நினைவு கூற மறுப்பாா்கள் என்பதனையும்     நினைவில் கொள்ளுங்கள்.

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதம் பெளா்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரையிலான14 நாட்கள்  எம்  முன்னோர்களை நினைவு கூறும்  ( மகாளய பட்ச) வழிபாட்டு  காலமாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.