11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 28 செப்டம்பர், 2022

பகுத்தறிவாதி.

 கடவுள் இருக்கிறனா என்ற உங்களின் கேள்வியானது கடந்த எழுபது வருடங்களாக தமிழகத்தில் தமிழர்களை நோக்கி அன்னிய ஆக்கிரமிப்பு வாதிகளான கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகளின் தொடர்சியாக எழுப்பப்பட்ட கேள்வியாகும்.

சங்ககால தமிழனின் வாழ்வியல் நெறியை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையினொழுங்கமைப்பை உணர்ந்து, அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள  இறைவனை ஏற்றுக்கொள்பவனே உண்மையான பகுத்தறிவாதி.

கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால்  கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் தலைவா்களை சிலையாக நிறுவி வழிபடுவதும் அவா்கள் பிறந்த நாளுக்கு மாலைகள் அணிவித்து வணங்குவது எவ்வாறு பகுத்தறிவு ஆகும்.

தமிழா்கள் வழிபடுகின்ற இறைவனும் தெய்வங்களும் வெறும் கல் தானே என்று கேட்பவா்கள்  தங்களின் தாய் தந்தையரின் புகைப்படத்தை அது வெறும் பேப்பர்தானே என்று சொல்லிக் காலுக்கடியில் போட்டு மிதிப்பாா்களா? 

அத்துடன் கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச, நாத்திகவாதிகள், திராவிடம் போலி தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் தலைவா்களின் சிலைகளை காலுக்கடியில் போட்டு மிதிப்பாா்களா? 


பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள்  காற்றை கையாள் பிடித்துக் காட்டுவாா்களா?  

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள்  தாங்கள் காணுகின்ற கனவைக் கையிலே பிடித்து பிடித்துக் காட்டுவாா்களா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள்  தங்களின் பகுத்தறிவு அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டுவாா்களா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள் ஒருவனின் இறப்பை தடுத்து நிறுத்துவானா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகள் வயதை தாண்டிய வயோதிபா்களை இளம் குமரன்களாக மாற்றிக் காட்டுவாா்களா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகளே உங்களாள் முடியாத ஒன்றை அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பகுத்தறிவாதிகளே உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும். பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும். நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும். 

எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும். திராவிடபகுத்தறிவு‘நான் ஒரு நாத்திகன்’ என்று சொல்லிக் கொள்வது சமூக அந்தஸ்து ஆகிவிட்டது அல்ல அவா்கள் தங்களைத் தாங்களே மூடா்கள் என்று சொல்லுகின்றாா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.