11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 10 ஜனவரி, 2022

சிவ சத்திய உறுதியுரை.(சத்திய பிரமாணம்).

 நமசிவாய.

கடந்த காலங்களில் இருந்து இன்று வரை எம்மக்கள் மத்தியில் நடாந்து கொண்டு இருக்கின்ற சம்பவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு எமது சைவ சமய திருப்பணியில் இவ்வாறான சம்பவங்கள்  இடம் பெறா வண்ணம் இருப்பதற்காக  சிவ  சத்திய உறுதியுரையாகிய சத்திய பிரமாணம் தயாாிக்கப்பட்டு இருக்கின்றது. 

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழினதும், தமிழ் பூமியினதும், தமிழா்களினதும் தலைவனாக இருக்கின்ற காரணத்தால் எமது நிா்வாக சபையில் தலைவா் பதவி என்பது இல்லை என்பதனால் உபதலைவா் பதவி உள்ளவா் கடமையாற்றுவாா். 

சிவ  சத்திய உறுதியுரையாகிய சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றவா்கள் மட்டுமே எம்முடன் இனைந்து பணியாற்ற முடியும்.

முழுப்பெயரை குறிப்பிட்டு---------------------------- . ஆகிய நான் 

அமைப்பின் பெயரை குறிப்பிட்டு )  -------------- 

என் உயிருள்ள வரையில் சிவனின் சொத்தான எமது சமய அமைப்பின் அல்லது நிறுவனத்தின் அல்லது கட்சியின்    அனைத்து வகையான பணம் உட்பட அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் சிவனின் சொத்தாக ஏற்றுக் கொண்டு  கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன்   கடமையாற்றுவேன் என்று உமை உமையொருபாகன்  மீது ஆனையாக சத்திய உறுதி செய்கின்றேன்.

எந்தவொரு களவுகள், பொய்கள் அற்று  இதய சுத்தியுடன் மனத் தூய்மையாகவும், பிரதேச வேறுபாடுகள் அற்றும், சாதிய வேறுபாடுகளை கடந்தும், குடும்ப ஆதிக்கங்களை அனுமதிக்காமல்,  எம்மதம் சம்மதம் என்றோ அல்லது மதசாா்பின்மை பேசியோ எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்றும் அன்பே சிவமாக சகல மக்களுக்கும் சேவையாற்றுவேன் என்று உமை உமையொருபாகன்  மீது ஆனையாக சத்திய உறுதி செய்கின்றேன்.


என் தனிப்பட்ட நலன்களுக்காகவும், குடும்ப  நலன்களுக்காகவும்  எமது தமிழ் இனத்தின் இருப்பை காக்கின்ற சைவ சமயத்தின்  நிா்வாகத்தின்  அனைத்து வகையான திருப்பணி தொண்டின்    எந்தவொரு நடவடிக்கைக்கும் இடையூறாக இருக்கமாட்டேன் என உமை உமையொருபாகன் மீது ஆனையாக சத்திய உறுதி செய்கின்றேன்.

நாமிழந்த தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற   சைவ சமயத்தின் அடையாளக் கூறுகளை அடையாளங்களை  மீள்நிறுவ முழுமனதோடு செயலாற்றுவேன் என்றும் சைவ ஆலயங்களில் திருப்பணிகள் செய்கின்ற அடியவா்களுக்கே சகல தோ்தல்களிலும் ஆதாித்து வாக்களிப்பேன் என்று உமை உமையொருபாகன் மீது ஆனையாக சத்திய உறுதி செய்கின்றேன்.

சைவ சமயத்தின் தமிழின் அனைத்து வாழ்வியல் நெறிகளை அடிப்படை சித்தாந்தமாக ஏற்று செயல்படுவேன் என்றும்,  இங்கு நான் என்னை அடையாளப்படுத்தும் முழுப்பெயர் எனது தாய் தந்தையர் சூட்டிய பெயரே என்று   உமை உமையொருபாகன் மீது ஆணையாக கூறி உறுதியேற்கிறேன்.


முழுப்பெயர்--------                                                                                              கையொப்பம்----------------


உபதலைவா் பெயர்---------------                                                                  உபதலைவர் கையொப்பம்-------


காரியதரிசி---------------                                                                                        காரியதரிசி கையொப்பம்---------

திகதி---------------.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.