11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு!

 தமிழ் எழுத்துக்கள் பிறந்து தவழ்ந்த‌ வரலாறு!

இந்த பாரினில் தமிழ் எழுத்துக்கள் பிறந்து, தவழ்ந்த வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) 

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

   க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்      

மெய் எழுத்துக்கள் நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும்.இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப் பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12,                                                                                       உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.


மெய் எழுத்துக்கள்: 18,                                                                                         மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது.

உயிர்மெய் எழுத்துக்கள்: 216,                                                                          உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும். 


ஆயுத எழுத்து: 1, தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247           நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற  – ஆறும் வல்லினம்.

 ங, ஞ, ண, ந, ம, ன-ஆறும் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள– ஆறும் இடையினம்.


உலகமாந்தன்முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்                   (படர்க் கை),  (தன்னிலை),  (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயி ரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி, த்+அ கூடி ‘த’ வாகவும், ம்+இ கூடி ‘மி’ யாகவும், ழ்+உ கூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடை யெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழை த்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே.

மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.

இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216 சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது. ஆக 216×100=21600

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப்படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும். தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை. நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை.

தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் உணர்த்துவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்.

அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார்? 

தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர். அது ஆதியில் "இ "என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது.

ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். 

 இறைவன் அருளிய தெய்வீக தமிழ் சிவயோக சித்தாந்தத்துடன் தொடா்புடை ஆரோக்கியமான உடல் கூற்றை கொண்டது. தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனே தமிழ் ஆகும்.  ஆகவே சிவனை முழுமுதலாக கொண்டது தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.