தமிழர் அடையாளங்களுடன் திகழ்ந்த திருவள்ளுவரை நாம் கொண்டாடவில்லை என்றால், தோமாவிடம் ஞானஸ்தானம் பெற்று தான் திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் என்ற வரலாற்றை பாடநூல்களில் படிக்க நேரிடும். அத்துடன் யூத கொலைக் கருவியான சிலுவையை மரக்கட்டையில் செய்து கழுத்தில் தொங்கவிட்டு திாியவேண்டி வரும்.
'திருவள்ளுவ நாயனார்' பிறந்தது வைகாசி அனுஷத்தில்,அதே போல அவர் முக்தி பெற்றது மாசி உத்தரத்தில்..இதையே தமிழறிஞர்களும்,சமயப் பெரியவர்களும் ஏற்றுக் கொண்டு வழி நடந்தார்கள்.திருவள்ளுவர் திருநாட்கழகம் என்று அறிஞர்களை ஒன்று கூட்டி 'வைகாசி அனுஷத்தை' தமிழர் ஒன்றுபடும் திருநாளாக அந்த திருவள்ளுவர் தினத்தை அறிவிக்கவே முயன்றார்கள்..
௬00 வருடம் பழமையான திருவள்ளுவர் கோவிலிலும் அதுவே நிலைப்பாடு.ஆனால் வருடா வருடம் வைகாசி அனுஷம் வெவ்வேறு நாட்களில் வரும் என்ற குழப்பத்தினால் திருவள்ளுவர் பிறந்த தினத்தை 'ஜூன் ௨' என்கிற கிரிகோரியன் கணக்கீட்டில் கொண்டாட முடிவெடுத்தார்கள்.முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை காலத்திலும் இப்படித்தான் கொண்டாடப்பட்டது.
ஆனால் தமிழ்புத்தாண்டை சித்திரையில் இருந்து மாற்ற முற்பட்டு நமது பண்பாட்டு வேரினை துண்டிக்க முயல்வது போலே அன்று தை ௨ ற்கு திருவள்ளுவர் தினம் மாற்றப்பட்டது..
பண்பாட்டு நிலை சக்திகள் திருவள்ளுவரை மீட்க முயல்வது போலவே,சித்திரை ௧ தமிழ் புத்தாண்டினை தக்க வைக்க முயல்வது போலவே,திருவள்ளுவர் பிறந்த தினத்தை 'வைகாசி அனுஷம்' என்று நிறுவவும் அவர் முக்தி தினத்தை 'மாசி உத்தரம்' என கொண்டாடவும் முயல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.