11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

ஆலயங்களில் முரன்பாடுகள் ஏன்?

ஆலயங்களில் ஆறு கால பூசைகளாவன உசத்கால பூசை (சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது).  காலசந்தி பூசை(சூரிய உதயத்திற்கு பின்பு).  உச்சிக்கால பூசை ( நண்பகலில் நடத்தப்படுகிறது). சாயரட்சை பூசை (சூரியனின் மறைவுக்கு முன்பு) சாயரட்சை இரண்டாம் கால பூசை அர்த்தசாம பூசை என்பனவாகும்.

 ஆலயங்களில் ஆறு கால வழிபாடுகள் நடைபெறாத ஆலயங்களில் தமிழின் விசேட நாட்களான சிவராத்திரி மற்றும்  தமிழ் வருடப்பிறப்பு போன்ற நாட்களில் நடைபெறல் வேண்டும்.  

 தமிழ் வருடப்பிறப்பு நாளில் நள்ளிரவில் அல்லது அதிகாலை ஒருமணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் பிறந்தால் சூாிய உதயத்தின் பின்புதான் ஆலயம் திறந்து விசேட வழிபாடுள் செய்ய முடியும் என்று ஆலய குருமாா்களும் ஆலய நிா்வாகத்தினரும்  விளக்கம் கொடுக்கின்றனா்.

  தமிழ் வருடப்பிறப்பு நள்ளிரவில் அல்லது அதிகாலையில் பிறந்தால் ஆலயங்களை திறவாத ஆலய குருமாா்களும்   நிா்வாகத்தினரும்  ஜனவரி முதலாந் திகதி மட்டும் நள்ளிரவில் திறப்பது எந்த ஆகம விதியில் உள்ளது என்பதனை ஆலய குருமாா்களும் ஆலய நிா்வாகத்தினரும்  விளக்கம் கொடுக்க மறுக்கின்றனா்.

ஆகம விதிக்கு முரனாக ஆலயங்களை நடத்துபவா்களும் அவா்களது சந்ததிகளும் குலநாசமாய் போன பல வரலாறுகள் எமது கண் முன்னால் காணப்படுகின்றது.

தமிழினத்தை வழிநடாத்த வேண்டிம ஆலயங்கள் தமிழின அழிப்பில் ஈடுபடுவதையே சுட்டிக் காட்டுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.