ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் தமிழ் பெயர்களை அழித்து ஐரோப்பிய பெயா்களாகவும் யூத கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களாகவும் மாற்றுவது தமிழ் அழிப்பு ஆகும். ஆகவே சிங்களம் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை ஐரோப்பிய பெயா்களும் யூத கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களும் ஆக்கிரமிப்பு பெயா்களாகும்.
வரலாற்றுப் பெயர்களை மாற்றுவது இனத்தை மாற்றி அழிப்பதற்கே ஆகும். “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய தமிழ் கிராமங்களை ஐரோப்பிய அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட ஆக்கிரமிப்பு மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களாக மாற்றுவது தமிழின அழிப்பாகும்”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.