11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

'யாமார்க்கும் குடியல்லோம்' என்றுரைக்கும் தமிழின் கொடி.

 


தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளியது  கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடி இடபக் கொடி பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமானது இடபக்கொடியாகும்.

சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப் படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட தமிழின் சைவக் கொடி இடபக்கொடியாகும்.

கட்சிகளினது அமைப்புகளினதோ நிறுவனங்களினதோ  கொடிகளோ என்றும் தமிழ்தேசியத்தின் கொடிகளாகமாட்டாது. அத்துடன் அது அவர்களின் அமைப்புகளை சாா்ந்த கொடிகளாகும்.

28-02-2022 அன்று வரும் மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு உலக சைவ பேரவை நிறுவுனர் அருள்செல்வன் அவர்களினால் எமக்கு வழங்கிவைக்கப்பட்ட நந்திக்கொடிகள் இன்றைய தினம் பண்டத்தரிப்பு, மற்றும் சங்கானை பகுதிகளில் உருத்திர சேனையால் ஏற்றிவைக்கப்பட்டது. சைவர்களின் அடையாளம் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களின் இராச்சியக் கொடியான நந்திக்கொடியை அனைத்து தமிழர்களும் வரும் சிவராத்திரி தினத்திலும், இனி வரும் சமய மற்றும் தமிழ் விழாக்களிலும் ஏற்றி தமிழர்களாகிய எமது அடையாளத்தை போற்றி நிற்போம்.



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.