11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

தமிழின் "வித்தியாரம்பம்" கிறிஸ்தவமாக மாற்றுவது தமிழின அழிப்பு.

 அட்டமி மற்றும் நவமி திதியில் சுப காரியங்கள் எதையுமே தமிழர்கள் ஆரம்பிக்கமாட்டார்கள் இதுதான் தமிழின் மரபு.   வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) ஒவ்வொரு வருடமும் நாவராத்தியின் இறுதியில் தசமி எப்பொழுது வருகின்றதோ அன்றுதான்  வித்யாரம்பம் செய்யவேண்டும்.  இதுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும். ஏடு தொடக்குதல் தமிழர்களின் மரபுவழி முறையாகும். தமிழ்தேசியத்தின்  மரபுவழி கலாச்சார பண்பாட்டு அடையாளக் குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

நவராத்திரி கொலுவை விஜய தசமியன்று நிறைவு செய்வது தமிழர்களின் மரபு ஆகும்.விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நட்சத்திரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதுதான் தமிழின் மரபு.

 தமிழுடன் தொடா்புள்ள வித்தியாரம்பத்தை கிறிஸ்தவ மதத்துடன் தொடா்புபடுத்தி கிறிஸ்தவ மயப்படுத்துவது தமிழின அழிப்பு ஆகும். தமிழின கலாச்சார பண்பாடுகளை நிராகாித்து தங்களை கிறிஸ்தவா்களாக அடையாளப்படுத்தியவா்கள் சைவநெறிகளுக்காக  என்றும் ஆசைப்படக் கூடாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.