“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’, “அன்னை” என்று தமிழ் வார்த்தையை பயன்படுத்திய ஔவை “தந்தை” எனத் தமிழில் குறிப்பிடாமல் ‘பிதா” என சமஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தியதிலிருந்து என்ன புரிகிறது?
ஔவை வாக்குப்படி தமிழ் தாய் மொழி, சம்ஸ்கிருதம் தந்தை மொழி. தாயினையும் தந்தையையும் பிரித்தல் சரியா? தந்தையை தாய்க்கு எதிராக எண்ணுவதும்,எதிராக்குவதும் சரியாகுமா? தமிழுக்கு எதிராக சமஸ்கிருதம் என எண்ணுவதும், எழுதுவதும், பேசுவதும் தாய்க்கு ஆம் தமிழுக்கு செய்யும் துரோகம். சமஸ்கிருதம் கலக்காத சங்கத்தமிழ் இலக்கியம் எதுவுமே இல்லையே. சமஸ்கிருதம் கலக்காத பக்தி இலக்கியம் கூட எதுவுமே இல்லை.
இராஜேந்திர சோழர் தமிழ் மன்னராக இருந்தாலும் இவர் பரத கண்டத்தின் பல்வேறு பகுதிகளை ஒரு குடையின் கீழ் ஆண்ட சக்கரவர்த்தியாக விளங்கியதால் இந்தப் பகுதிகளைத்திற்கும் பொதுவான இணைப்பு மொழியான சமஸ்கிருதத்தை அவர் தன் அரசாங்க முத்திரையில் பயன்படுத்தியுள்ளார்.
இராஜேந்திர சோழரின் அரசாங்க முத்திரை. இதில் பொறிக்கப்பட்டுள்ள புலி சோழ சாம்ராஜ்யத்தைக் குறிக்கும். மீன்கள் பாண்டிய நாட்டையும், வில் சேர நாட்டையும், பன்றி சாளுக்கிய நாட்டையும் குறிக்கும். மேலுள்ள குடையும் அதன் மேல் உள்ள சக்கரமும் இவர் இந்த ராஜ்யங்களையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் சக்கரவர்த்தி என்று சொல்கிறது. சுற்றியுள்ள கிரந்த எழுத்துக்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.