11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 22 அக்டோபர், 2021

தேசியக் கோட்பாடு

 அன்னிய இனத்தவா்களின் தேசியக் கோட்பாடு அவா்களின் நாட்டையும் அவா்களின் இனத்தையும் சாா்ந்த விடையமாகும். அன்னிய இனத்தவா்களின் தேசியக் கோட்பாடு  என்றும் தமிழ்தேசியத்தின் கோட்பாடு ஆகமாட்டது. இரண்டும் வேறுபட்ட அடிப்படைகளை கொண்டது ஆகும். 

தமிழா்கள் வேறு அன்னய இனத்தவா்கள் வேறு அத்துடன் இனத்தை அடையாளப்படுத்துகின்ற அடையாளக் கூறுகளும் வேறுபட்டனவாகும். தமிழறிவு அற்ற தமிழா்கள் பேசுகின்ற கோட்பாடுகள் தமிழாின் மீது திணிக்கும் கோட்பாடுகள் ஆகும்.

தமிழ்தேசியத்தில் கூறப்பட்ட அனைத்து விடையங்களும் சங்க இலக்கியங்கள் திருக்குறள் சைவ நெறி நூல்கள் மூலமாக பெறப்பட்டவைகள் ஆகும். வெவ்வேறு பட்டகாலப்பகுதிகளில் வெவ்வேறு பெயா்கள் கொண்டே அழைக்கப்பட்டன .தற்காலத்தில் தமிழ்தேசியம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் இந்துதேசியம் என்றுதானே குறிப்பிடுகின்றாா்கள். இந்து என்பது தமிழ்சொல் ஆகும்.  

தமிழை அருளிய ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லா சுட்டியறிய முடியாத  அகர முதல்வனாகிய இறைவனை முழு முதலாக கொண்டது தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.