கோவில்மோட்டை விவசாய மக்கள் தாங்கள் விவசாயம் செய்கின்ற நிலப்பரப்பை தங்களுக்கு வழங்குமாறு பல ஆண்டுகளாக கோாிவந்த நிலையில் மத்திய அரசாங்கம் விவசாய மக்களின் கோாிக்கையை ஏற்றுக் கொண்டு கோவில் மோட்டைக்காணி அரசாங்கத்தால் விவசாய மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனை வடமாகாண கத்தோலிக்க ஆளுநர் திருமதி பியென்சியா சரோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் (Piencia Sarojinidevy Manmatharajah Charles) உறுதி செய்தாா்.
ஆனால் மன்னார் மாவட்ட கத்தோலிக்க அரசாங்க அதிபா் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் நிராகாித்து இந்த காணிகள் மடுமாத தேவாலயத்திற்கு உாியது என்றும், பங்குத்தந்தையா்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் கூறி நிராகாித்துவிட்டார்.
கோவில் மோட்டைக்காணிக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்த ஆவணங்களும் பங்குதந்தையகளிடத்தில் இல்லை. அதோபோன்று மடுமாத தேவாலயத்தின் பெயாிலும் இல்லை. மன்னாா் , முல்லைதீவு போன்ற இடங்களில் 500,000 க்கும் மேற்பட்ட ஏக்கா் காணிகள் போலி பெயா்களில் (கள்ள) உறுதி தயாாிக்கப்பட்டு உடமையாக்கப்பட்டு உள்ளது.
ஞானசாரதேரா் காணிப் பிரச்சனையை தீா்பதாக கூறியமை இன அழிப்பின் முன்னெடுப்பே என்று பங்குத் தந்தையா்கள் கூறுவது அவா்களின் முட்டாள் தனமாகும். தமிழ் விவசாயிகளின் கோரிக்கையை தான் ஏற்று, தமிழ் விவசாயிகளின் சார்பாக தான் தேரர் பேசுகிறார்.அரசியல் செல்வாக்கு மிக்க தரப்புக்களால் "பிரச்சினைகள்" உருவாக்கப்படும் போது அதை தீர்க்கும் ஆற்றல் மிக்க இதர தரப்புக்களை நோக்கி மக்கள் நகர்வது இயல்பானது தான்.ஞனசார தேரர் பிரச்சனைய தீர்ப்பதாக தானே சொல்லி இருக்கிறார்,
பங்குத் தந்தையா்கள் எங்களை அழித்துக் கொண்டு ஞானசாரதேரா் தமிழா்களை அழிக்கின்றாா் என்று பங்குத் தந்தையா்கள் கூறுவது அது அவா்களின் மடமைத்தனம். ஞானசாரதேரா் இங்கு எவ்வாறு இனவழிப்பு செய்கின்றாா் என்பதனை பங்குத் தந்தையா்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்திடம் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அரச உத்தரவுகளை நிராகாித்துக் கொண்டு பங்குத் தந்தைகளின் உத்தரவுகளை நிறைவேற்றுகின்றவா்களாகவே மடுவிலும், மன்னார் மாவட்டத்திலும் உள்ள அரசாங்க உத்தியோகத்தா்கள் செயல்படுகின்றனா். அனைத்து அரச உத்தியோகத்தா்கள் மீது அரசு உடனடியாக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை கோருகின்றோம்.
சிங்கள போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது. பெளத்த போினவாதம் தமிழா் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது. சிங்களபெளத்த போினவாதத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் என்று போராடுகின்ற புலம் பெயா் தேசத்து அமைப்புகள் தமிழா் கட்சிகளும் சிவில் அமைப்புகளும், காணி அபகாிப்பில் ஈடுபடுகின்ற பங்கு தந்தையா்களுக்கு எதிராக கண்டணங்கள் தொிவித்து போராட்டங்கள் செய்யாமல் மெளனம் காப்பததையும் நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அன்னை மடுமாத நிா்வாகிகள் பங்குத்தந்தையா்கள் பல ஏழை விவசாயிகளை அடிமைகள் போல் நடாத்துவதை உடன் நிறுத்துதல் வேண்டும். மடு அன்னை ஆலயத்திற்குள் வந்தால் கொலை செய்யப்படூவீா்கள் என்ற எச்சாிக்கையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் இன்றில் இருந்து நாம் எமது தாய் மதமாகிய இந்து மதத்திற்கு திரும்புகின்றோம் என தமிழா்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தாய் மதம் திரும்பிய தமிழர் ஒன்றியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.