11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம்.

 கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது. கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார்.

கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் கட்டி இன விரோதத்திற்கு வித்திட்டு, பல இன வன்முறைகளை நேரடியாக மேற்கொண்டவரும், இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு பக்கபலமாக இருந்தவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பின் முக்கிய சந்தேகதாரயுமான அந்h குறிப்பிட்ட அரசியல்வாதி கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்படுவது, மீண்டும் கிழக்கில் வன்முறைகள் பாரிய அளவில் வெடிப்பதற்கு வகைதேடித்தரும் என்று அச்சப்படுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ்- முஸ்லிம் மக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.