நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அருளிய ஆழ்வாா்கள் எந்தவொரு இடத்திலும் வைணவம் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடலில் வைணவம் என்ற சொல் இல்லை.
தமிழர் நிலத்திணைகளான மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை குறிஞ்சித் திணையின் தெய்வம் சேயோன்(முருகன்), காடும், காடு சார்ந்த இடமும் முல்லை. முல்லை திணையின் தெய்வம் மாயோன் (பெருமாள் அல்லது திருமாள்), இவையிரண்டுக்கும் இடையில் அமைந்தது பாலை திணை. பாலைத் திணை. பாலைத் திணையின் தெய்வம் கொற்றவை. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம். மருததிணை தெய்வம் இந்திரன் (வேந்தன்).கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் திணை.நெய்தல் திணையின் தெய்வம் வருணன். ஆகவே ஐந்திணையில் வைணவம் என்ற சொல் இல்லை.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை , குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (அகத்.5)
தெய்வங்களின் பெயரை சொல்லியும் உறவுமுறை பெயா்களை கூறியும் வழிபடுவது தமிழின் மரபு.தமிழா்கள் வழிபாட்டு முறைகளாள் கூறுபோட்டு தமிழா்களை முரன்படவைத்தவா்கள் கிறிஸ்தவ ஐரோப்பியா்களும் அவா்களது அடிமைகளும் ஆகும்.
சைவம் - சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. வைணவம் - விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு. சாக்தம் - சக்தியை வணங்கும் சமயப் பிரிவு. கௌமாரம் - முருகனை வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்). சௌரம் - சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. காணாபத்தியம் - விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. ஸ்மார்த்தம் - சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு என்று தமிழா்களையும் மோதவைத்து அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே சைவ சமயப் பிரிவுகள் ஆகும். தமிழில் இல்லாத அடையாளங்கள் திணிக்கப்படுவது தமிழ் அழிப்பிற்கும் தமிழின அழிப்பிற்கும் ஆகும்.
ஆகவே தமிழா்களாகிய எமக்கு பிாிவுகள் தேவை அற்றவை. தமிழ்போற்றிய அனைத்து தெய்வங்களும் தமிழ்தெய்வங்களாகும். தமிழ் தெய்வங்களின் பெயா்களை கூறியே தமிழா்கள் வழிபட்டு வந்தவா்கள். இந்த பதிவை மறுபபவா்கள் சங்கலால ஆதாரங்ளை கொண்டு வரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.