இந்து கோவில்களை உடைத்து எறிகின்ற திமுக மூடா்களுக்கு வீடியோக்களை படைக்கின்றேன்.
தினமும் காலையில், சரியாக 9 மணிக்கு துர்கா ஸ்டாலின் தனது பூஜையறைக்கு சென்று சாமி கும்பிடுவாராம். முதலில் அணையா விளக்கை தொட்டு வணங்கி விட்டு 2 குத்து விளக்குகளை ஏற்றுகிறார். இந்த அணையா விளக்கு எப்போதும் எரிந்துக்கொண்டேதான் இருக்குமாம். அப்ப அப்ப பார்த்து எண்ணெய் ஊற்றி விடுவார்களாம். இரவு நேரங்களில் விளக்கு நிறைவாக இருக்கும்படி எண்ணெய் ஊற்றிவிடுவேன். அதுபோல குத்து விளக்குகளை தினமும் காலையிலும் மாலையிலும் ஏற்றி பிறகு அணைத்து விடுவேன் எனக் கூறுகிறார் துர்கா ஸ்டாலின்.
தினமும் ஒரு பழமும் , ஒரு டம்ளரில் பாலும் வைத்து நெய்வேத்தியம் செய்வதாக கூறுகிறார். அதுபோல தினமும் பக்தி பாடல்கள் பூஜையறையில் ஒளித்துக் கொண்டே இருக்கும் எனக் கூறுகிறார். திங்கள் கிழமைகளில் சிவனுடைய பாடல்கள் செவ்வாய் கிழமைகளில் முருகனுடைய பாடல்கள் அப்புறமாக லலிதா சரஸ்கர நாமம் விஷ்ணு சரஸ்கர நாமம் என பக்தி நிறைந்த புத்தகங்களை வெள்ளிக் கிழமைகளில் முழுவதுமாக படிப்பது வழக்கம் என கூறுகிறார்.
முக்கியமாக விநாயகர் படம், முருகன், சரஸ்வதி, பெருமாள் படங்கள் வைத்துள்ளார். மேலும் சீரடி சாய் பாபாவின் சிலை, சிவன் சிலை, வாராஹி அம்மன் படம், 6 முகம் கொண்ட காயத்திரி சிலை, ராமர் , லட்சுமனர் சீதையின் சிலை, மிக முக்கியமாக ஒரிஜினல் ஆஞ்சநேயர் படமும் வைத்துள்ளார். அத்துடன் காசியில் வாங்கிய அன்னப்பூரணியின் சிலை வைத்துள்ளார். அதனை ஒரு தட்டில் வைத்து அதில் சிறிது அரிசியையும் போட்டு வணங்குவதாக கூறுகிறார். அதனருகிலேயே மிகவும் வித்தியாசமான சிவன் பார்வதி சேர்ந்துள்ள படமும் வைத்துள்ளார்.
பிறகு ஸ்டாலின் குலத்தெய்வமான மேல்மலையனூர் அங்காளம்மன் படமும் வைத்துள்ளார். துர்கா ஸ்டாலினின் குலத் தெய்வமும் அங்காளம்மன் தானாம். அத்துடன் தேர்தல் நேரத்தில் நிறைய முருகன் படமும் முருகனுடைய வேலும் பரிசாக வந்ததால் முதன் முதலாக திருத்தணியில் கொடுத்த முருகனின் வேல்-ஐ பூஜையறையில் வைத்துள்ளதாக கூறுகிறார் துர்கா ஸ்டாலின். பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த கடாயுதமும் வைத்துள்ளார்.
துர்கா ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு டியூசன் எடுத்த மாஸ்டர் பரிசாக கொடுத்த அன்னபூரணி சிலை வழிபாட்டுக்காக வைத்துள்ளார். இதே போல், நண்பர்கள், தெரிந்தவர்கள் பரிசாக கொடுத்த கடவுள் படங்கள், சாய்பாபா உள்ளிட்ட சிலைகளையும் வைத்து வழிபடுகிறார். அதேபோல், சிவன் படத்தில் ருத்ராட்சம் மாலை போட்டு வைத்துள்ளார். அதுபோல சிதம்பரம் கோயிலில் கொடுத்த வெட்டிவேர் மாலையையும் மாட்டி வைத்துள்ளார். துர்கை அம்மன் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ரெளதிர துர்க்கையை தினமும் வணங்குவதாக படத்தை காண்பிக்கிறார்.
பிறகு தினமும் பூஜையறைக்கு அவருடைய தோட்டத்திலேயே பூத்த பூக்களான செம்பருத்தி, நத்தியாவட்டை, அரளி பூ, மனோரஞ்சிதம் பூ, செண்பக பூ என அனைத்து பூக்களையும் வைத்து அலங்காரம் செய்வதாக கூறுகிறார்.
கடைசியாக பூஜை அறையில் துர்கா ஸ்டாலினின் குடும்பத்தில் உள்ள முன்னோர்களான , அஞ்சுகம் அம்மாள் , முத்துவேலன், கருணாநிதி, துர்காவின் அம்மா அப்பாவின் படங்கள் என அனைவரின் படங்களையும் வைத்து தினமும் பூஜிப்பதாக கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.