ஊரில் மிகவும் செல்வாக்குடன் இந்த மனிதர் பவனி வருவார். மக்களிடையே ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது இவரது தலையாய கடமையாகும். அங்கு நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளின் போது இவருக்குத்தான் முதல் அழைப்புகள் செல்லும். உடனே இவர் தனது உதவியாளரை அழைத்து தனது கைத்தடியைக் கொடுத்து அனுப்பி வைப்பார். உதவியாளரும் மிகவும் பயபக்தியுடன் அந்த கைத்தடியைக் கொண்டு போய் குறிப்பிட்ட அந்த வீட்டில் உடையாருக்கு என்று போடப்பட்ட மிகவும் உயர்தர இருக்கையின் அருகில் வைத்துவிட்டு நிகழ்வு முடிந்ததும் எடுத்துவருவார்.
எதிர்பாராத விதமாக உடையார் வீட்டில் ஒரு திருமணநிகழ்வு வந்தது. உடையார் வீட்டு நிகழ்வு என்பதனால் மிகவும் ஆடம்பரமாக பந்தல் எல்லாம் போட்டு உயர்தர இருக்கைகள் எல்லாம் தருவிக்கப்பட்டு ஏற்பாடாகி இருந்தது.
உடையார் திடீரென்று எப்படி மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது என்பதனை பார்க்கும் முகமாக வெளியில் வந்தார் மிகவும் ஆச்சரியப்பட்டார். மக்கள் கூட்டத்திற்குப் பதிலாக ஒவ்வொரு இருக்கைகளுக்குப் பக்கத்திலும் பல விதமான கைத்தடிகள் வைக்கப்பட்டிருந்தன.உடையார் மிக்க மகிழ்சியுடன் திரும்பினாா். அருளகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.