11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நினைவு கூறலில் நிகழ்வில் கிறிஸ்தவா்களின் தமிழ் கலாச்சார பண்பாட்டு கொலை.

 இயற்கையுடன் இரண்டர கலந்து இயற்கையூடே வளர்ந்த எம் தமிழினத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.எம் முன்னோர்களின் வழிகாட்டுதல்களிலும் அவர்களது விஞ்ஞான முன்னோட்ட அறிவாற்றல் செயல்களிலும் இருக்கும் தொன்மைகள் சொல்லிலடங்காதவை.

அவர்கள் எமக்கு சொல்லி வைத்து சென்ற சடங்கு சம்பிரதாய முறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்குப் பின்னே விஞ்ஞானத்துடன் இணைந்த இறை மெய்ஞானமும் பொதிந்துள்ளது.அந்த வகையில் ஒரு மனிதன் இந்த பூமியில் பிறந்ததிலிருந்து இறந்தது வரை செய்யப்படும் ஒவ்வொரு சடங்கிலும் ஆன்மீக நம்பிக்கையுடன் இறைபற்றும் இழையோடியுள்ளது.

எந்த தமிழ் மாதத்தில் உயிர் பிாிந்தது?   உயிர் பிரிந்த  துயர் நிகழ்வு காலையா?, நண்பகலா?, மாலையா?, முன்னிரவா? நள்ளிரவா?, விடியலா?, வளர் பிறையா? ,தேய் பிறையா?, எத்தனையாம் நாள்?  எல்லாம் கணித்து  மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும்  நீத்தார் கடன் வழிபாடாகும். இதுதானே   தமிழ்தேசியத்தின்  கலாச்சார பண்பாடு.

குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக. பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்கள் படைத்து நீத்தார் கடனாக நினைவேந்தல்  வழிபாட்டு  செய்யப்படுவதும் நினைவு கூறுவது தமிழ்தேசியத்தின் தமிழ்நெறியாகும்.

 தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின்  நினைவுத் தினத்தில் அஞ்சலி செய்தல் வேண்டும்.

இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) அவா்களது குடும்பத்தாா் அந்தனா்களை அழைத்து அவா்களது குடும்பத்தாா் வீடுகளில் செய்கின்ற நீத்தாா் வழிபாடு ஒரு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழமையாகும்.

 மேலும் சில குடும்பங்கள்  இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுத்து நீத்தாா் வழிபாடு செய்வது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழமையாகும். 
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவா்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு நெறிகளை நிராகாித்து கிறிஸ்தவதேசியத்தை பின்பற்றி தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவா்களை கிறிஸ்தவா்களாக மாற்றி மெழுகுதிாி கொழுத்தி நினைவு கூறுவது  இறந்தவா்களை அவமதிக்கும் செயல் அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு மாபெரும் தமிழின படுகொலை.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில்  நினைவு கூறல் நிகழ்வில்நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் நின்று  விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு ஒற்றை  குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல்   தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு. 

பெண்களாயின்  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு உடையில் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு ஒற்றை  குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல்   தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு. இவைகள் அனைத்தில் ஏதாவது ஒன்று நிராகாிக்கப்படுமானால் அவை கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் பிறந்து வாழ்ந்து இறந்தவகளை கிறிஸ்தவா்களாக மாற்றியமைத்து மெழுகு திரியை கொழுத்தி அஞ்சலி செய்வதும், மெழுகுதிரியை கொழுத்தி அதைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவதும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு சிதைப்பின் மூலம் ஏற்படுத்தப்படுகின்ற தமிழின கொலை.தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழர்களை அடிமைப்படுத்திய போர்த்துக்கீச கத்தோலிக்கம் தமிழர்கள் மீது திணித்ததே கத்தோலிக்க மெழுகுதிரி கலாச்சார பண்பாடு.தமிழுடனும் தமிழ்தேசியாத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் தொடர்பற்ற அன்னிய கலாச்சார பண்பாடுகளை தமிழ்தேசத்தின் மீது திணித்து நிறுவது என்பது தமிழின அழிப்பாகும்.

கிறிஸ்தவ சிங்கள அரசு மட்டும் தமிழின படுகொலைகளை செய்யவில்லை. கிறிஸ்தவ மிசனறிகளால் இயக்கப்படுகின்ற அவா்களின் கூலிப்படைகளும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக தமிழின படுகொலைகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள். இவா்களும் தமிழின கொலையாளிகள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை கொலை செய்து தமிழா்களை அழிக்கவேண்டும் என்ற நிகழ்சி நிரல்களை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் கிறிஸ்தவ மிசனறிகள்.

 கல்வி அறிவ அற்றவா்கள், அடிமைவாத சிந்தனை கொண்டவா்கள், மதசாா்பின்மை வாதிகள்,வெட்கம், மானம், சூடு, சொரணை முள்ளம் தண்டு என்று ஒன்றும அற்றவர்கள், தமிழ் தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை தெரியாதவர்கள் மேற்கொள்ளுகின்ற அனைத்தும் தமிழின கொலைகளாகும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.