11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 14 ஆகஸ்ட், 2021

தெய்வீக தமிழின் சிறப்புகள்.

 ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.  தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவன் தமிழ் ஆகும். தமிழ்  சிவன் சாா்ந்தது சைவ சமயம் சாா்ந்தது. ஆகவே சிவனுடன் தமிழ் கலந்தே தமிழாகும்.

தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளியது  கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடி. 

தமிழை அருளிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய திருநீறு கலந்த கலை கலாச்சார பண்பாடுகள்  தமிழ் தேசியத்தின் அடையாளமாகும். இறைவன் அருளிய தமிழ் போற்றிய அனைத்து தெய்வங்கள் மட்டுமே தமிழர்களின் தெய்வங்களாகும்.   தமிழை அருளிய இறைவனை   நிராகரித்து தங்களை தமிழால்  அடையாளப் படுத்துவதும்   தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு. கொலை செய்வது மட்டும் தமிழின அழிப்பு அல்ல.

இறைவன் அருளிய தெய்வீக தமிழ் சிவனின் நெற்றி கண்ணில் இருந்து  பொறிகளாக வெளிப்பட்டு  பொய்கை நதியில் பட்டதும்  தமிழ் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக  அவதரித்த நன்னாள் வைகாசி விசாக  ஆகும்.

அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து வர. பின் ஒருநாள் அந்த ஆறு குழந்தைகளுக்கும் தாயான பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கையில், பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார்.

தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆயுதமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு.

முருகனின் நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும், முருகனின்  கலாச்சார பண்பாட்டு உடைகளும் தமிழர்களுடையதே இவைகள் அனைத்தும் பார்வைக்கு தமிழன் என்று சொல்லும். இறைவன் அருளிய தெய்வீக தமிழிழே முருகனாக அவதாரம் எடுத்தது என்பது வரலாறு. 

முருகனை தெய்வமாக போற்றாதா அனைவரும் தமிழ்துரோகிகள். இவா்களே உண்மையான தமிழின அழிப்பாளா்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.