11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

வீரமாமுனிவர்.

   கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி --(Constantine Joseph Beschi) என்ற இயற் பெயரை கொண்டவர் வீரமாமுனிவர். சுவடி தேடும் சாமியார்,  தைரியநாதர், வீரமாமுனிவர் என்ற பெஸ்கி அய்யர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர்  கான்ச்டன்டைன் ( Constantine Joseph Beschi) சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார்.கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக் கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார். இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் தமிழில்  எழுதியதுடன் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின்  வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

தமிழ் இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்தும் திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற நூல்களையும் மொழிபெயாா்த்து இயேசு சபைக்கு அணுப்பிவைத்தாா்.

காண அரிதான பல பொக்கிஷங்கள் இயேசு சபைக்கு கடத்தப்பட்டு பின்பு  பல சுவடிகள் அழிந்து விட்டதாகவும் தமிழ்மொழியை வளம் படுத்தியதாக புராணம்  சொண்ணாா். 

தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச்  சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே லத்தின்மொழி   தமிழுடன் கலக்கப்பட்ட முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.  பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை  உருவாக்கினார். தமிழுடன் போத்துக்கீய மொழிகலக்கப்பட்டது தமிழுடன்   பிறமொழியை கலந்தவா் வீரமாமுனிவர் தமிழ் அழிப்பாளர்.  

திராவிடங்களை பொறுத்த மட்டில் தமிழ் அழிப்பு செய்த  வீரமாமுனிவர் ( கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி --Constantine Joseph Beschi) தெய்வம். தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழை அழித்தவன்

அருளகம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.