சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது. பெளத்த பேரினவாதம் தமிழர்களின் பூர்வீகத்தை ஆக்கிரமிக்கின்றது என்று கூறியும் எழுதியும் பேசியும் கொண்டு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த சிறு சைவ (இந்து ) ஆலயங்களை உடைத்து எறிந்தாா்கள் கத்தோலிக்க குண்டர்கள்.
தமிழ்திருநாட்டின் வரலாற்று ஆதாரங்களாகவும், தமிழினத்தின் இருப்புக்கான ஆதாரங்களாகவும், எமது முன்னனோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாக எம்கண்முன்னே எழுந்து நிற்பது ஆலயங்கள் ஆகும். ஆலயங்களை அழிப்பது என்பது தமிழர்களின் இருப்பை அழித்து அதன் ஊடாக தமிழினத்தை அழிக்கும் செயலாகும்.
*சிலாவத்துறை.
1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில் முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தார்கள். சைவர்களின் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினார்கள். சைவர்களின் எதிர்ப்புகள் காரணமாக தமிழீழ விடுதலை புலிகள் அகற்றினாா்கள். இதனை நிறுவிய கிறிஸ்தவர்களும், பாதிரிகளும் சைவக் குடிகளை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளாள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டாா்கள்.
*2010 குருநகர்
போர் முடிந்த பின்பு 2010 இல் நாவாந்துறை மற்றும் குருநகர் மீனவர்கள் அடாத்தாக அரசு நிலத்தில் வாடியும் சிலுவையும் அமைக்க முயன்ற பொழுது தனங்களப்புச் சைவக் கடற்தொழிலாளர் ஒன்று சேர்ந்து அந்த வாடியும் சிலுவையும் உடைத்து நொறுக்கினர்.
*2011ல் மடு அருள்மிகு பிள்ளையார்.
அருள்மிகு பிள்ளையார் கோவிலை தமிழர்கள் மீளமைக்கவிடாது கத்தோலிக்கர் தடுத்தனர்.
*2012ல் வங்காலைக்குள் தமிழர்கள் செல்ல தடை.
புனித மெக்கா நகருக்குள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தடை இருப்பதுபோல கத்தோலிக்கர் அல்லாதவர்கள் வங்காலைக்குள் பிரவேசிக்க முடியாது மார்க்கஸ் பாதிரிதடைவிதித்தான்.
*2013ல் அச்சன் குளம்.
நானாட்டனில் தமிழர்களுக்கு விளை நிலங்கள். அங்கே அச்சன் குளத்தில் அருள்மிகு பணிக்கர்ப் பிள்ளையார் கோவில் , அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோவில் , அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் என தமிழர்களின் வழிபாட்டிடங்கள். அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோவிலை கத்தோலிக்கர்கள் இடித்துத் தரை மட்டமாக்கினர்.
*2014ல் அரிப்பு.
முசலிப் பிரதேச செயலக பிரிவின் வடக்கெல்லை அரிப்பு.வரலாற்றுப் புகழ் பெற்ற துறை . முத்துக் குளிப் போரின் சல்லடை ஊர். ஆற்று முகத்துவாரம் அருகே அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில். அரிப்புஅருள்மி கு முத்துமாரியம்மன் கோவிலைக் கத்தோலிக்கர் இடித்தனர்.அக்கோயில் அருகே அடாத்தாகத் தூண் எழுப்பி அதில் மரியாள் சிலை அமைத்தனர்.
*2014ல் எருவிட்டான் .
எருவிட்டானில் அருள்மிகு வைரவர் மற்றும் அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில்கள் இருந்தன . அருள்மிகு வைரவர் கோயில் இருந்த சூலத்தை நானாட்டான் பங்குத் தந்தை ஆணையிட்டதால் கத்தோலிக்கர் புடுங்கி அகற்றினார்.
*வெள்ளாங்குளம்.
2015ல் சிவபூமி தேசத்தில் முழுக்க முழுக்கச் தமிழர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் தமிழர்கள் வாழும் அவ்வூரில் தமிழர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் “ BISHOP HOUSE OF MANNAR. "
* வெள்ளாங்குளம்.
2016ல் வெள்ளாங்குளம் சந்தியிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால் உடைத்து கடலில் எறியப்பட்டது.
*நெல்லியான் ஊர் .
2016ல் புதுக்குடியிருப்பு அரச காணிகளில் குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் நெல்லியான் ஊரைச்சேர்ந்த சைவ குடும்பங்களின் 2 குடிசைகள் கத்தோலிக்கரால் கொழுத்தப்பட்டு குடியிருப்பு தடுக்கப்பட்டது.
*25-4 -17 வெள்ளாங்குளம்
இரவு வெள்ளாங்குளம் முனியப்பர் கோயிலை கத்தோலிக்கர்கள் தாக்கினாா்கள்
*நானாட்டான்.
2017ல் நானாட்டான்- புதுக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் சூழலிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால் உடைக்கப்பட்டது.
*2018 ல் தலைமன்னார்.
தலைமன்னார் பிள்ளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு.
*உயிலங்குளம்.
2018ல் உயிலங்குளம் சந்தி பிளாளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு
*வண்ணாமோட்டை.
2018ல் தள்ளாடி விமான ப் படை ஓடுபாதையின் முன்னாலிருந்த அருள்மிகு பிள்ளையார் கோயில் வழிபாடுகளை தமிழர்களும் பெளத்த சிங்கள இராணுவ வீரர்களும் வழிபட்டு வந்தவர்கள். அந்த விநாயக சிலையை கத்தோலிக்கர்கள் உடைத்தனர். தமிழர்கள் மீண்டும் திருப்பணி செய்தனர், பொங்கல் பொங்கி வழிபட்டனர். மீண்டும் கத்தோலிக்கர்கள் உடைத்தனர்.
*திருக்கேதீஸ்வரம்.
2019 ம் ஆண்டு மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்தம், நந்திக் கொடியை காலால் மிதித்தும் , கிழித்தும் தீய் மூட்டியவர்கள் “ BISHOP HOUSE OF MANNAR"
*நல்லூர் முருகன் ஆலயத்தில் அட்டூலியங்கள்.
27-03-2021 அன்று கத்தோலிக்க மத நிறுவணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஓயிலை ஊற்றி நெருப்பு மூட்ட முயற்சித்தாா்கள்.
*மூன்றாம் பிட்டி.
மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்து தமிழர்களின் சைவ நெறியை மறுத்தவர்.
*சிலாவத்துறை.
சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் “ BISHOP HOUSE OF MANNAR "கத்தோலிக்கக் Church ஒன்றைப் கட்டிய அல்லாமல் அங்கு வாழ்கின்ற தமிழர்களை மிரட்டி கத்தோலிக்கத்திற்கு மாற்றி தமிழின அழிப்பு செய்தாா்கள்.
*ஆள்காட்டிவெளி, தள்ளாடி.
ஆள்காட்டிவெளி, தள்ளாடி என தமிழ் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், தமிழர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பது “ BISHOP HOUSE OF MANNAR".
*தலைமன்னார்.
தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலிலும், ஏ32 வாயிலிலும் கத்தோலிக்க வளைவை கட்டி கிறிஸ்தவ தேசியத்தை நிறுவினாா்கள்.
*கேரதீவு.
கேரதீவு மன்னார் சாலையோரம் அருள்மிகு பிள்ளையார் சிலையை கத்தோலிக்கர்கள் உடைத்தனர். மீன்பிடி படகில் ஏற்றினர் தேவன்பிட்டிக்கு அப்பால் கடலில் வீசினர்.
*வண்ணான் குளம்.
ஆலய பெயர்களையும், வீதிகளின் தமிழ் பெயர்களையும் அகற்றினர். உடைத்து எறிந்தனர். தமிழ் பெண்பிள்ளைகளை கெட்ட வாா்த்தைகளாள் பேசினாா்கள். இலங்கை இராணுவம் கூட இதனை செய்யவில்லை.
*இலுப்பைக் கடவை.
பெரும்பான்மை தமிழர்களின் இலுப்பைக் கடவை பாடசாலையில் கலை மகளுக்குத் திரு உருவச் சிலை . வாயிலில் நிறுவுவதற்கு பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகவும் தீர்மானத்தை நிறைவேற்றி கல்வித் தினைக்களமும் அங்கீகரித்தது. தடுத்து நிறுத்தியது.
*தலைமன்னாா்.
தலை மன்னாரில் தமிழகளின் எதிர்ப்பை மீறிச் சாலை வாயிலில்கத் தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள். அதற்கு எதிராக தமிழர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
*உயிலங் குளம்.
கல்லாக் கோட்டை அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில், அருள்மிகு வயிரவ கோயில் , உயிலங்குளம் சந்தியில் அருள்மிகு பிள்ளையாா் கோயில். இந்த பிள்ளையாரை உடைத்து எறிந்தாா்கள்.
*புதுக்குடியிருப்பு.
மன்னார் நகரம் பிரதேச செயலர் பிரிவில், புதுக்குடியிருப்பில் அருள்மிகு சிவன்கோயில் கருவறை இலிங்கத்தை 2018 சிவராத்திரி தின வாரத்தில் கத் தோலிக்கர் உடைத்து அகற்றினர்.
*மடுவுக்கு ஒரு நீதி - திருக்கே தீச்ச ரத்துக்கு ஒரு நீதி.
மன்னார் - மதவாச்சி ச் சாலையில் மடுவுக்குள் செல்லும் வளைவுஅகலமான கத்தோலிக்க வளைவு. தமிழர்கள் பெரும்பான்மைப் பிரிவு. ஆனால் கத்தோலிக்க வளைவு. ஆனால் சைவத் தமிழ் அடையாளங்கள் அற்ற நுழை வாயில்.
*மன்னார் - மதவாச்சி சாலை.
மன்னார் - மதவாச்சி ச் சாலையில் திருக்கேதீச்சரத்துக்கு உள்செல்லும் வளைவு அகலமான சைவ வளைவு. அவ்வளைவின் முன்பாக உலூர்தம்மாள் சிலை . தமிழ் பெரும்பான்மைப் பிரிவு எனினும் கத்தோலிக்கச் சின்னம் அங்கே .
*கட்டையடம்பன்.
நானாட்டான் பிரிவில் முருங்கனுக்கு அருகே ,கட்டையடம்பன் அரசுப் பள்ளியில், கத்தோலிக்க அருள்நங்கை முதல்வர். சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக் கூடாது; பூ வைக்கக் கூடாது என்பது அப்பள்ளி முதல்வரின் ஆணை .
*கற்கிடந்த குளம்.
நானா ட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் கற்கிடந்த குளம்,கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தா லும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று, மன்னார் - மதவாச்சிச் சாலை சந்திப்பில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்கள்.
கற்கிடந்த குளத்தில்
சைவர்களைக் கத்தோலிக்கராகுமாறு அருட்தந்தையர் அழுத்த கொடுப்பாா். மறுக்கும் தமிழர்களை வெளியேற்றக்காரணம் கண்டுபிடிப்பர். கந்தசாமி தன் தமிழ் அடையாளங்களை அழித்து கத்தோலிக்க மதம் மாற மறுத்தார். கிறித்தவம்ஏற்காத மூட நம்பிக்கை சூனியம். கந்தசாமி சூனியம் செய்தார் என அருட்தந்தை மிரட்டினார். ஊரை விட்டே விரட்ட முயன்றார்.
*குஞ்சுக்குளம், கற்குளம்.
குஞ்சுக்குளத்தில் , கற்குளத்தில் உள்ள கிறித்தவதேசியத்தின் சின்னங்களும் வளைவுகளும் அன்னியர்களர்கள் இங்கு வாழ்ந்து உள்ளாா்கள். இது அவர்களின் பூர்வீக இடம் என்றுதான் எதிர்கால வரலாறுகள் பேசும். தமிழன் வாழ்ந்தான் என்று ஒரு பொழுதும் வரலாறுகள் பேசமாட்டாது.
*செட்டியார்மகன் , முருங்கன்பிட்டி.
நானா ட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் செட்டியார்மகன் ,முருங்கன்பிட் டி இரு ஊர்களிலுமாக, 100 தமிழ் குடிகள் . நாடாளுமன்ற உறுப்பின ர் ஆபிரகாம் சுமந்திரன் துணை த் தலை வராகப் பணியாற்றிய மெ தடிசுத்த திருச்சபையினர் அங்கு வந்தனர். 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர் . சைவக் கோயில்களை இடித்தனர்.
சுமந்திரன் குடும்பத்தினர் 1000 மேற்பட்ட தமிழ் குடும்பங்களை அவர்களின் தமிழ் அடையாளங்களை அழித்து கிறிஸ்தவதேசியமாக மாற்றி உள்ளனர்.
*பொன்தீவுக் கண்டல்.
அருட் தந்தைகள் தடிகள் , கற்கள் தாங்கிய கத் தோலிக்கர் கூட்டத்தை அழைத்து வந்து நானா ட்டான் பிரதேச செயலகத்தைக் கல்லெறிந்து தாக்கினர்.தன்னை த் தாக்க எறிந்த கல்லை இப்பொழுதும் நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார். அப்போதைய பிரதேசச்செயலர் மதவெறியாளரைக் காவலர் கைது செய்யவில்லை . வழக்கும் பதியவில்லை.
*நறுவிலிக்குளம்.
நறுவிலிக்குளத்தில் தமிழர்களுக்கு தனியாகச் சுடுகாடு. நீத்தாரைச் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் வழியைக் கத்தோலிக்கர் மறிக்கின்றனர். மனித நேயமற்ற மதவெறியில் கூத்தாடுகின்றனர்.
*புதுக்குடியிருப்பு.
நானாட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் புதுக்குடியிருப்பில் யாழ்ப்பாணம் நெல்லியான் என்ற ஊரை சேர்ந்த மக்கள் போரால் அங்கு புலம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் புதுக்குடியிருப்புக்கு மீண்டனர். அவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் கீற்றுக் குடிசைகளை தத்தம் நிலங்களில் குடிசைகளைக் அமைத்தனர்.அக்குடிசைகளைக் கத்தோலிக்கர்கள் கொளுத்தினர்.
*சிலாவத்துறை.
சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்க Church ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டி மதம் மாற்றி இருந்தாா்.தமிழர்களை சைவ சமயத்தின் தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்டாா்கள்.
அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் Church யை கட்டியவர்கள் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து அத்து மீறி மதில் கட்டியது "Bishop's House " இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்.
* சங்குப்பிட்டி 30-03-2021
பூனகரி சங்குப்பிட்டி பிள்ளையாரை சங்குபிட்டி கிறிஸ்தவர்கள் அகற்றி இருந்தாா்கள் மீண்டும் சங்குப்பிட்டி மக்கள் மீண்டும் 01-04-21 இல் பிள்ளையாரை நிறுவி இருந்தாா்கள்.
மன்னாா் முசலியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.