11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தமிழின கொலையாளிகள் Methodist Church இன் அம்பிகா Vs Pastor. சுமந்திரன்.

 Methodist Church  இன் அம்பிகா  இலங்கை  மனித உரிமைகள் ஆணைய தலைமை பொறுப்பில் இருக்கும் போது தமிழருக்கு செய்த நன்மைகள்.

தமிழின படுகொலையை   இலங்கையின் நீதிமன்றங்களின்   ஊடாக நல்லதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஸ்பெஷல் கோர்ட் எதுவும் தேவையில்லை. அத்துடன் வெளியாா் தலையீடு அவசியம் அற்றது என்று கருத்தை வெளியிட்டு தமிழின படுகொலை நியாயமானது என்று கருத்துப்பட கருத்தை வெளியிட்டவர்  Methodist Church  இன் கிறிஸ்தவ அம்பிகா.  

Methodist Church  இன் கிறிஸ்தவ அம்பிகாவை  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor  ஏபிரகாம் சுமத்திரனால்  களமிறக்கப்பட்டவர்.

1. மாமனிதர் ரவிராஜ் படுகொலை வழக்கு :24 டிசம்பர் 2016 அன்று நீதிமன்ற ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவர்களால் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்

2. திருகோணமலை குமரபுரம் பகுதியில் 24 பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில் 2016 ஜூலை 27 அன்று பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு, சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர் .

3. திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்கு: 2019 ஜூலை 3 அன்று குற்றம் சாட்டப்பட்ட 13 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்

4. அக்சன் பாம் என்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை வழக்கு : இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகல இராணுவ வீரர்களும் போதிய ஆதாரங்கள முன்வைக்கத் தவறியதாக சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

5. எழுதுமட்டுவாள் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் என சொல்லப்படுகிற இடத்தில இலங்கை ராணுவம் ஒன்றை 71 வயதான அம்மாவின் 54 ஏக்கர் காணியை அபகரித்து 52 பிரிவின் தலைமையகம் அமைத்து இருக்கிறார்கள் .2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் உள்ள . மேல்முறையீட்டு நீதிமன்றம் (CoA), இந்த காணி தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் காணிகளை ராணுவத்திடம் இருந்து பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. சிங்கள நீதிபதி மஹிந்த சமயவர்தன “தேங்காய்களைப் பிடுங்குவது/ தென்னைகளை நடுவது தேசிய பாதுகாப்பை விட முக்கியமானது அல்ல” என்று கூறி தனது தீர்ப்பில் அந்த அம்மாவை ஏளனம் செய்து இருந்தார்

6. செம்மணி புதைகுழி தொடர்ப்பன ஆட்கொணர்வு மனு தொடர்ப்பன வழக்குகளை தாக்கல் செய்த தமிழ் சட்டத்தரணிகள் இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் நீதிமன்ற வளாகத்திற்குள்  வைத்தே அச்சுறுத்தப்பட்டார்கள் . குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமே  வாதாடியது .இறுதியில் அந்த வழக்கை தொடர்ந்த கலாநிதி குருபரன் சட்டத்தொழில் செய்யமுடியாது என நல்லாட்சி அரசாங்கதால்   தடை செய்யப்பட்டார்

7. யாழ்ப்பாண பல்கலை துணைவேந்தர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தமிழமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என  குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . இதற்க்கு எதிராக  துணைவேந்தர் தாக்கல் செய்த வழக்கு தூக்கி வீசப்பட்டது

8. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்ப்பன வழக்கில் இறந்த புத்த பிக்குவின் உடலம் கோவில் வளாகத்திற்குள் எரிக்கப்பட கூடாது என  முல்லைத்தீவு தமிழ் நீதிவான் வழங்கிய உத்தரவு மீறப்பட்டு கோவில் வளாகத்திற்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது

9. நல்லாட்சி அரசாங்க காலத்தில் அணிந்திருந்த ஆடையில் தர்மசக்கரம் இருந்தாக பொய் சொல்லி சிறுபான்மை இன பெண் ஒருவர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

இவை வெறும் உதாரணங்கள் மட்டும் தான் .  இவை எல்லாம் ஜனநாயக மீறல்கள் இல்லையா / அப்பாவி மக்களுக்கு நீதி வழங்காத ஏமாற்று வேலைகள் இல்லையா  ? அதுவும் மத்திய அரசில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகள் அங்கம் வகித்த நல்லாட்சி அரசில் நடந்த கொடூரங்கள் இல்லையா ?

ஆனால் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் மேற்குறித்த எந்த வழக்குகளையும்  மத்திய அரசியன்  பங்காளிகள் என்கிற அடிப்படையில் அரசியல் ரீதியாக சவாலுக்கு உட்படுத்தவில்லை. மாறாக நல்லாட்சி அரசாங்கத்தின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என சான்றிதழ் கொடுத்தார்கள்.

இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது .  தேர்தல் அரசியலுக்காக இப்போது நீதிமன்றம் போவதாக நாடகமாடுகிறார்கள் . எந்த தொழில் சார்ந்த அறமும் இல்லது சொந்த கட்சி ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா  முன்னறிவித்தல் கொடுத்த வழக்கில் அவரின் சம்மதம் இன்றி சுமந்திரன் , அம்பிகா, சயந்தன் என வரிசையாக வழக்கு தாக்கல் செய்கிறார்கள் . ஒரே கட்சியை சேர்ந்த சட்டத்தரணி தவராஜாவை அவமானப்படுத்த வேண்டிய தேவை என்ன ? அரசியல் இலாபம் என்பதை தவிர வேறு எதாவது ஒரு காரணம் சொல்ல முடியுமா ?

சரி இனி என்ன நடக்கும் ? 10 வருசம் வழக்கு இழுபடும்.இறுதியில் தள்ளுபடி செய்யப்படும்.கடந்த நல்லாட்சி காலத்தில் கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வழக்கிலும் இது தான் நடந்தது . இளம் சட்டத்தரணி ஒருவர் வழக்கு தாக்கல் செய்ய முயன்ற பொது அந்த வழக்கில் திடீர் என்று புகுந்து கொண்ட சயந்தனும் சுமந்திரனும் இரண்டு தவணைகள் வழக்காடினார்கள் .இப்போது இந்த வழக்குக்கு என்ன நடந்தது ? என்ன தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது  ? யாராவது பதில் சொல்ல முடியுமா ? கன்னியா வெந்நீர் ஊற்று சிங்கள அபகரிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டதா ?

எதுவும் செய்ய முடியாத இவர்கள் தொடர்ச்சியாக பொய்களை பேசுகிறார்கள் /பரப்புகிறார்கள் .தங்களை ஜனநாயகத்தின் காவலர்கள் என புகழாரம் சூட்டுகிறார்கள் . நேற்று நடந்த ஒரு சிறு சம்பவமே இதற்க்கு மிக சிறந்த சான்று ... ஊரடங்குச் சட்டம் பிழை என்பதால்   ரஞ்சன் ராமநாயக்காவைப் பொலிஸார் கைது செய்தமை தவறு  என கூறி திரு ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார என பொய்களை பரப்புகிறார்கள் .ஜனநாயகத்திற்காக போராடுவதாக கதை சொல்லுகிறார்கள்

ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுவார்கள் சுமத்திரனும் அவர்களின் செம்புகள்.

அருளகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.