11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

இயக்க படு கொலைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு.

 கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் ,உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் தோழர்கள் என்று பாசத்தோடு அழைத்த தோழர்களையும்,     அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி , சொல்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள், அல்லாத மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள்.மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி இரத்த ஆற்றை ஓடவைத்து மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தினாா்கள்.

தமிழ் ஈழ போராட்ட ஆயூத குழுக்குழுக்களின் படு கொலைகளும் , கொள்ளைகளும் தமிழ்சமூகத்தை யுத்தம் முடிந்து 20 ஆண்டுகளில் அநாதைகளாக வீதியில் நிறுத்தி இருக்கின்றது. பல இலட்சம் தமிழர்களை படு கொலை செய்வித்தவர்களினால் தமிழின அழிப்புசெய்யப்பட்டு இருக்கின்றது. இலங்கை அரசு மட்டும் தமிழினத்தை கொலை செய்யவில்லை. இலங்கை அரசு தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூறிக் கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக ஆயூத போராட்டம் செய்த அனைத்து கொலைக்கார அமைப்புகளும் தமிழர்களை  கொலை செய்தாா்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.