CHURCH கள் பாதிரிகளின் பாலியல் கூடாரங்களாக காட்சி கொடுக்கின்றது. CHURCH இல் இருக்கின்ற கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள், CHURCH (சர்ச்) க்கு வருகின்ற பெண்கள் குழந்தைகளை கற்பழித்த வழக்குகள், கொலை செய்தவழக்குகள் பல நூறு உள்ளது. அதில் சில உங்களுக்காக.
ஜெர்மனியில் 1946-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கத்தோலிக்க பாதிரிகளால் சுமார் 3,677 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அதிர்ச்சி கரமான தகவலை இரண்டு முன்னணி ஜெர்மன் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.ஜெர்மன் பாதிரியார்கள் அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ ஆய்வு, ஜியெசென் பல்கலைக்கழகம், ஹெய்டல்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் மன்ஹெய்ம் பல்கலைக்கழகம் (Universities of Giessen, Heidelberg, and Mannheim) ஆகியவற்றால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முழு விவரங்கள் எதிர்வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாலியல் பலாத்காரத்து ஆளாகியுள்ளனர். குறைந்தது 1,670 பாதிரியார்கள் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்றும் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அந்த ஆய்வறிக்கையிலிருந்து கசிந்த தகவல்கள் கூறுகின்றன. பெரும்பான்மையான பாதிரியார்கள் குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் வேறு திருச்சபைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் மூன்றுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மட்டுமே கத்தோலிக்க திருச்சபையால் விசாரிக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பீகல் ஆன்லைன் (Spiegel Online) மற்றும் டை செய்ட் (Die Zeit) என்ற இரு பத்திரிகைகளால் திரட்டப்பட்ட அத்தகவலின்படி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்கும் குறைவான ஆண் குழந்தைகள். அவர்களில் 969 சிறுவர்கள் பாதிரிகளுக்கு உதவி செய்வதற்காக வந்த தொண்டுப்பணி சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக 46 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தார். பஞ்சாப்பின் ஜலந்தரை சேர்ந்த இயேசு திருச்சபை சமயப்பரப்பு அமைப்பின் உறுப்பினராக அந்த கன்னியாஸ்திரி உள்ளார். அந்த இயேசு திருச்சபை கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த குரவிலங்காடு மற்றும் கண்ணூரைச் சேர்ந்த பரியாரம் ஆகிய இரண்டு இடங்களில் மடங்களை நிர்வகித்து வருகிறது.
அதில் ஒரு மடத்தை சேர்ந்தவர்தான் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த கன்னியாஸ்திரி. அந்த மடத்தில்தான் பாதிரி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் நாட்களில் பாதிரியார் அங்கு இருந்ததை மடத்தின் பார்வையாளர் நாட்குறிப்பும் உறுதி செய்கிறது.
கேரளாவைச் சேர்ந்த பல்வேறு கிறித்தவ CHURCH கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல. 16 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கருவை கலைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தின் பாதிரி ராபின் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த சிறுமிக்கு பின்னர் குழந்தை பிறந்தது. 9 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இராஜு கோக்கேன் என்ற மற்றொரு பாதிரி 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
திருச்சூரை சேர்ந்த புதன்வெளிக்கராவில் உள்ள தன்னுடைய வீட்டில் 14 வயதேயான சிறுமியை பாதிரி எட்வின் பிகாரெஸ் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 2016-ம் ஆண்டில் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2013-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக புனித ஸ்டானிஸ்லாஸ் CHURCH இன் மதகுருவான ஆரோக்கியராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட பாதிரி அந்த CHUECH இல் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் மீது போலீசில் எந்த வழக்கும் பதியப்படவில்லை.
இந்தியாவில் லத்தீன், சிரோ-மலபார் மற்றும் சிரோ-மலங்கரா தேவாலயங்கள் கத்தோலிக்க திருச்சபை நிர்வாகத்தில் வருகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு 132 மறை-மாவட்டங்களும், சிரோ-மலபார் CHURCH ற்கு 31 மறை-மாவட்டங்கள் மற்றும் சிரோ-மலங்கரா CHURCHற்கு 11 மறை-மாவட்டங்களும் இந்தியாவில் உள்ளன.
Friday, April 16, 2021 கேரளாகொல்லம் குறிப்புழா செயின்ட் ஜோசப் கத்தோலிக்க சர்ச் கான்வென்ட்டில் யேசுபாலனுக்கு என்று நோ்ந்து விட்ட கன்னியாஸ்திரியை கற்பழித்து கொலை செய்து வீசிய மிசனறிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.